உள்ளடக்கத்துக்குச் செல்

பிருந்தாவனம் காதல் கோயில்

ஆள்கூறுகள்: 27°34′21″N 77°40′21″E / 27.5724569°N 77.6724919°E / 27.5724569; 77.6724919
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேம் மந்திர்
பிரேம் மந்திர்
பிருந்தாவனம் காதல் கோயில் is located in உத்தரப் பிரதேசம்
பிருந்தாவனம் காதல் கோயில்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
மாவட்டம்:மதுரா
அமைவு:பிருந்தாவனம்
ஏற்றம்:169.78 m (557 அடி)
ஆள்கூறுகள்:27°34′21″N 77°40′21″E / 27.5724569°N 77.6724919°E / 27.5724569; 77.6724919
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இராஜஸ்தான் & குஜராத் கட்டிடக் கலை
வரலாறு
அமைத்தவர்:கிருபாளு மகராஜ்
இணையதளம்:http://jkp.org.in
இராதாகிருஷ்ணன்
கிருஷ்ணரின் ராசலீலை காட்சி, பிரேம் மந்திர், பிருந்தாவனம்
இரவு வெளிச்சத்தில் பிரேம் மந்திரின் நுழைவாயில் காட்சி

காதல் கோயில் அல்லது பிரேம் மந்திர் (Prem Mandir) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் ஊரில் ராதை, கிருஷ்ணர், சீதை மற்றும் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இதனை ஜெகத் குரு கிருபாளு மகராஜ்[1][2] நடத்தும் தொண்டு நிறுவனத்தால் 17 பிப்ரவரி 2012 அன்று நிறுவப்பட்டது. இக்கோயில் மூலவர்கள் இராதா கிருஷ்ணன் மற்றும் சீதா-இராமர் ஆவார்.

இக்கோயில் வளாகம் பிருந்தாவனத்தின் புறநகரில் 55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு தளங்கள் கொண்ட இக்கோயிலின் முதல் தளத்தில் இராதா கிருஷ்ணன் கோயிலும், இரண்டாம் தளத்தில் சீதை மற்றும் இராமருக்கான கோயிலும் உள்ளது.

இக்கோயில் மண்டபம் 73,000 சதுர அடி பரப்பளவில் தூண்கள் இன்றி, குவிமாடம் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ஒரே நேரத்தில் 25,000 பக்தர்கள் அமர்ந்து வழிபட முடியும்.[3] இக்கோயிலை சுற்றிலும் அழகிய தோட்டங்கள், நீர் ஊற்றுகள், ராதை மற்றும் கோபியர்களுடன் கிருஷ்ணரின் ராசலீலைகள், கோவர்தன மலையைத் தூக்கும் காட்சி, காளிங்க நர்த்தனம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் துணைக் கோயிலான கீர்த்தி கோயில் பர்சானா எனும் ஊரில் 2019-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[4]மற்றொரு துணைக் கோயிலான பக்தி கோயில் 2015-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

திருவிழாக்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]