கோவர்தன்

ஆள்கூறுகள்: 27°30′N 77°28′E / 27.5°N 77.47°E / 27.5; 77.47
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவர்தன்
பேரூராட்சி
கோவர்தன் is located in உத்தரப் பிரதேசம்
கோவர்தன்
கோவர்தன்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோவர்தன் பேரூராட்சியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°30′N 77°28′E / 27.5°N 77.47°E / 27.5; 77.47
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மதுரா
வருவாய் வட்டம்கோவர்தன்
ஏற்றம்179 m (587 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்22,576
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • Nativeவிரஜ மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்281502
வாகனப் பதிவுUP-85
கோவர்தன மலை
கிருஷ்ணர் கோவர்தன மலையைத் தூக்கும் காட்சி

கோவர்தன் (Govardhan), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது மதுரா நகரத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும், பிருந்தாவனத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] கோவர்தன மலையில் கிருஷ்ணரின் கோயில் உள்ளது.[2][3] இது கடல்மட்டத்திலிருந்து 179 மீட்டர் (587 அடி) உயரத்தில் உள்ளது. இங்கு கோவர்தன மலை அமைந்துள்ளது. இது இந்துப் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்துக்கள் இங்குள்ள புனித கோவர்தன மலையை வலம் வந்து கோவர்தனன் பூஜை செய்கின்றனர்.

கோவர்தன மலை[தொகு]

கிருஷ்ணர்-ராதையில் குடிகொண்டுள்ள கோவர்தன மலையை 21 கிலோ மீட்டர் வலம் வந்து பக்தர்கள் கோவர்தனன் பூஜை செய்வது வழக்கம். கோவரதன மலைப் பகுதியில் குசும குளம், ஹரிதேவ் கோயில் உள்ளது.

தொன்ம வரலாறு[தொகு]

இந்து தொன்மவியலில் கிருஷ்ணர் இளம் பருவத்தில் விளையாடியதாக கருதப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்திரன் கோபம் கொண்டு பொழிவித்த பெரும் மழையால் துயரம் கொண்ட யாதவர்களையும் மற்றும் கால்நடைகளையும் இப்பகுதியில் உள்ள கோவர்தன மலையை, கிருஷ்ணர் குடையாகத் தூக்கிப் பிடித்து காத்தமையால் கிருஷ்ணருக்கு கோவர்தனன் எனப்பெயராயிற்று.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 14 வார்டுகளும், 3,910 வீடுகளும் கொண்ட கோவர்தன் பேரூராட்சியின் மக்கள் தொகை 22,576 ஆகும். அதில் ஆண்கள் 12,114 மற்றும் பெண்கள் 10,462 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 864 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 75.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,975 மற்றும் 7 ஆகவுள்ளனர். இந்துக்கள் 93.19%, இசுலாமியர் 5.9%, சமணர்கள் 0.43% மற்றும் பிறர் 0.47% ஆகவுள்ளனர். [5]

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவர்தன்&oldid=3625436" இருந்து மீள்விக்கப்பட்டது