மதுரா சிங்கத் தூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுரா சிங்கத் தூண்
MathuraLionCapital.JPG
மதுரா சிங்கத் தூண்
செய்பொருள் செம் மணற்கல்
அளவு 16.75 அங்குலம்
உருவாக்கம் கிபி 1-10
கண்டுபிடிப்பு மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
தற்போதைய இடம் பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்


மதுரா சிங்கத் தூண் (Mathura lion capital), கிபி முதல் நூற்றாண்டின் துவக்க காலத்தில், பரத கண்டத்தின் மதுரா பகுதிகளை ஆண்ட இந்தோ சிதிய மன்னர்கள் நிறுவிய இந்த மணற்கல் சிங்கத் தூணை, தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்தில் 1869ம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. [1] இச்சிங்கத்தூணில் பிராகிருதத்தின் கரோஷ்டி எழுத்துமுறையில் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.[2] [3]

இந்தோ சிதிய மன்னர் முகி என்பவரின் நினைவாக இச்சிங்கத் தூண் நிறுவப்பட்டதாகும். இச்சிங்கத் தூணில் இந்தோ சிதிய மன்னர்களின் வழித்தோன்றல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. [4]

இச்சிங்க தூணில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகள், மகாசம்ஹிகா புத்தப் பிரிவை எதிர்க்கும் சர்வாஸ்திவாத பௌத்தத்தை இந்தோ சிதிய மன்னர்கள் ஆதரித்தாக குறிப்பிடுகிறது. [5]தற்போது இச்சிங்கத் தூண் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

சிங்கத் தூணின் நடுவில் பௌத்த சமயத்தின் திரிரத்தினச் சின்னம்
சிங்கத்தூணில் அடியில் கரோஷ்டி எழுத்துக் கல்வெட்டுக் குறிப்புகள்
சிங்கத் தூணின் குறுக்கு வெட்டு வரைபடங்கள்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jason Neelis (19 November 2010). Early Buddhist Transmission and Trade Networks: Mobility and Exchange Within and Beyond the Northwestern Borderlands of South Asia. BRILL. பக். 122. ISBN 90-04-18159-8. https://books.google.com/books?id=GB-JV2eOr2UC&pg=PA122. 
  2. Red Sandstone Pillar Capital, British Museum, accessed August 2010
  3. An Inscribed Silver Buddhist Reliquary of the Time of King Kharaosta and Prince Indravarman, Richard Salomon, Journal of the American Oriental Society, Vol. 116, No. 3 (Jul. - Sep., 1996), pp. 442 [1]
  4. List of the inscriptions on the Mathura lion capital
  5. Rosenfield, "The dynastic art of the Kushans", p.134

ஆதாரங்கள்[தொகு]

  • Baums, Stefan. 2012. “Catalog and Revised Texts and Translations of Gandharan Reliquary Inscriptions.” In: David Jongeward, Elizabeth Errington, Richard Salomon and Stefan Baums, Gandharan Buddhist Reliquaries, p. 219–222, Seattle: Early Buddhist Manuscripts Project (Gandharan Studies, Volume 1).
  • Baums, Stefan, and Andrew Glass. 2002– . Catalog of Gāndhārī Texts, no. CKI 48
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_சிங்கத்_தூண்&oldid=2472989" இருந்து மீள்விக்கப்பட்டது