விதர்பா
விதர்பா
विदर्भ | |
|---|---|
Map of India with Vidarbha highlighted in red | |
| நாடு | இந்தியா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 97,321 km2 (37,576 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,30,03,179 |
| • அடர்த்தி | 240/km2 (610/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| பெரிய நகரம் | நாக்பூர் |
விதர்பா அல்லது விதர்ப்பம் (மராத்தி: विदर्भ, ஆங்கிலம்: Vidarbha) மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பழைய பெயர் பெரர் ஆகும். இது மகாராஷ்டிராவின் மொத்தப்பரப்பில் 31.6% ஆக்கிரமித்துள்ளது. மகாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகையில் 21.3% கொண்டுள்ளது. இப்பிரதேச மக்கள் தனி மாநிலம் கேட்டு போராடி வருகின்றனர்[2].
புராண, இதிகாச காலங்களில் இப்பிரதேசம் விதர்ப்ப நாட்டின் கீழ் இருந்தது. கிபி 1491 முதல்1574 முடிய இப்பிரதேசம் பெரார் சுல்தானகம் ஆட்சியின் கீழ் இருந்தது.
இதன் வடக்கே மத்தியப் பிரதேசம் மாநிலம் உள்ளது. கிழக்கே சட்டீஸ்கரும் தெற்கே தெலுங்கானா உள்ளன. மேற்கே மத்தியப்பிரதேச மாநிலம் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. விதர்பா தனக்கென தனியான கலாச்சாரமும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது.
விதர்பா பகுதியின் மிகப்பெரிய நகராக நாக்பூர் இருக்கிறது, இரண்டாவது பெரிய நகராக அமராவதி உள்ளது. பெரும்பாலான விதர்பாவாசிகள் மராத்தி மொழி மற்றும் வாகர்தி மொழி பேசுகின்றனர்.
நாக்பூர் பகுதியில் ஆரஞ்சு மற்றும் பருத்தி பிரபலமானது. மகாராஷ்டிராவின் கனிம வளங்களில் விதர்பா மூன்றில் இரண்டு பங்கு வகிக்கிறது. வனப்பரப்பில் நான்கில் மூன்று பகுதியைக் கொண்டுள்ளது. விதர்பா பகுதியில் தடோபா அந்தாரி தேசியப் பூங்கா, மெல்கட் புலி திட்டம், பென்ச் புலி திட்டம் (Pench Tiger Project), பொர் சரணாலயம் (Bor Sanctuary), பாந்தார மாவட்டத்தில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளன. இந்தியாவின் மற்ற பகுதிகளைவிட விதர்பா அமைதியான பகுதி. எந்தவித மத, இன மோதல்களும் இல்லாத பகுதி. ஆனால் அதிக அளவு மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகராஷ்டிரத்தின் பிற பகுதிகளைவிட இங்கு பொருளாதாரம் வளர்ச்சியின்றி இருக்கிறது.
நிர்வாகம்
[தொகு]விதர்ப்ப பிரதேசம் நாக்பூர் மற்றும் அமராவதி என இரண்டு கோட்டங்களையும், 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. [3][4]
| கோட்டம் | தலைமையிடம் | மாவட்டங்கள் | வட்டங்கள் |
|---|---|---|---|
| அமராவதி கோட்டம்[5] | அமராவதி | 56 | |
| நாக்பூர் கோட்டம்[6] | நாக்பூர் | 64 |
விவசாயிகள் தற்கொலை
[தொகு]இங்கு விவசாயிகள் தற்கொலை பெருமளவில் நடப்பதைத் தடுக்க அகோலா தாலுகாவிலுள்ள ஜில்லா பரிஷித் பள்ளி மாணவ மாணவியருக்கு ’அப்பா விஷம் குடிக்காதீர்கள்’ என்ற பொருள்படும் பாடலை ஆசிரியர்கள் கற்றுத் தந்தனர். இதனை ஊர் மக்கள் முன் மாணவர்கள் நடித்தும் காட்டுகின்றனர்.[7]
மக்கட்தொகை விவரம்
[தொகு]| மதம் | மதம் மக்கட்தொகை | % |
|---|---|---|
| இந்து | 15,866,514 | 76.906% |
| பௌத்தம் | 2,697,544 | 13.075% |
| இஸ்லாம் | 1,720,690 | 8.340% |
| கிறித்துவம் | 70,663 | 0.343% |
| சீக்கியம் | 37,241 | 0.181% |
| சமணம் | 89,649 | 0.435% |
| பிற | 127,516 | 0.618% |
| குறிப்பிடப்படாதது | 21,170 | 0.103% |
| மொத்தம் | 2,30,03,179 | 100.000% |
வெளியிணைப்புகள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Population". 2011-03-31. Archived from the original on 2018-12-26. Retrieved 2011-04-06.
- ↑ Vidarbha movement
- ↑ Asian Review. 1898.
- ↑ Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland. Royal Asiatic Society of Great Britain and Ireland. p. 323.
- ↑ "Amaravati Division". Government of Maharashtra. Archived from the original on 15 September 2008. Retrieved 1 June 2024.
- ↑ "Nagpur Division". Government of Maharashtra. Archived from the original on 9 October 2017. Retrieved 1 June 2024.
- ↑ ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஜனவரி;2013; பக்கம் 13,15; விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கும் மாணவர்கள்