ஔரங்காபாத் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகாராட்டிரத்தின் ஔரங்காபாத் மண்டல மாவட்டங்களை காட்டும் வரைபடம்.

ஔரங்காபாத் மண்டலம் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஒரு மண்டலம். இது மராத்வாடா (மராட்டி: मराठवाडा) எனவும் அழைக்கப்படுகிறது. மராத்வாடா இந்தியாவில் மகாராட்டிர மாநிலத்தில் ஔரங்காபாத் மண்டலத்தின் நிலப்பரப்பின் வரலாற்றுப் பெயர் ஆகும். தலைநகராக வடமேற்கில் உள்ள ஔரங்காபாத் விளங்குகிறது. .

வரலாறு[தொகு]

நவம்பர் 1,1956 வரை முந்தைய ஹைதராபாத் நாட்டை சேர்ந்திருந்த மராத்வாடா அந்நாளில் பிரிக்கப்படாத பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.இந்தியாவின் மற்ற பகுதிகள் ஆகஸ்ட் 15,1947இல் விடுதலை பெற்றாலும் மராத்வாடா செப்டம்பர் 17,1948 அன்றே இந்தியாவுடன் இணைந்தது.அந்நாளில் ஆபரேசன் போலோ எனப்படும் இராணுவ நடவடிக்கையால் இந்திய இராணுவம் நிசாமின் ஆட்சியிலிருந்து ஹைதராபாத்தை விடுவித்தது.இக்காரணத்தால் 17 செப்."மராத்வாடா முக்தி தின்" என கொண்டாடப் படுகிறது.

மரத்வாடா மாவட்டங்கள்[தொகு]

 1. அவுரங்காபாத்
 2. பீடு
 3. ஹிங்கோலி
 4. ஜால்னா
 5. லாத்தூர்
 6. நாந்தேடு
 7. உஸ்மானாபாத்
 8. பர்பணி


சிறப்பு குறிப்புகள்[தொகு]

இங்குள்ள சமய சிறப்பு பெற்ற இடங்கள்: அசந்தா,எல்லோரா சக்தி பீடங்கள்:மகூர்,அம்பாஜோகை ஜோதிர்லிங்க கோவில்கள்:கிருஷ்னேஷ்வர் (வெருல்),நாக்நாத் (ஔந்தா),வைஜ்யநாத் (பர்லி) பத்தாவது சீக்கிய குரு குருகோபிந்தசிங் அவர்களின் சமாதி:சச்காண்ட் (நாந்தெட்)

தவிர துறவிகள் தியானேஷ்வர்,நிவ்ருத்திநாத்,சோபன்தேவ்,முக்தாபாய்,ஏக்நாத், சமர்த் ராம்தாஸ் மற்றும் நாம்தேவ் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இப்பகுதி மாநிலத்தின் மிகப் பின்தங்கிய வலயமாக விளங்குகிறது.ஆயினும் இங்கு தொழிற்துறை வளர்ச்சி பெற்று வருகிறது.ஔரங்காபாத்தில் சிற்றுந்து தொழிற்சாலைகள் ஸ்கோடா,ஆடி அமைந்துள்ளன. இந்தால்கோ,பார்லே,சீமன்ஸ் மற்றும் ராடிகோ நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை ஆரம்பித்துள்ளன.வீடியோகான் தனது தொலைக்காட்சிப் பெட்டிகள்,குளிர்பதனப் பெட்டிகள்,துவைக்கும் கருவிகள் முதலியவற்றையும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஒளியிழை கேபிள்களையும் தயாரித்து வருகின்றன.

சில புள்ளிவிவரங்கள்[தொகு]

 • பரப்பளவு: 64,811 ச.கி.மீ
 • மக்கள்தொகை (2001 கணக்கெடுப்பு): 15,589,223
 • மாவட்டங்கள்: பர்பானி, ஔரங்காபாத், பீட், இங்கோலி, ஜல்னா, லத்தூர், நாந்தெட் & ஓசுமானாபாத்
 • படிப்பறிவு: 88.95%
 • பாசன பரப்பு: 9,610.84 ச.கி.மீ

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔரங்காபாத்_மண்டலம்&oldid=2048960" இருந்து மீள்விக்கப்பட்டது