சயிஸ்ட கான்
செயிஸ்ட கான் | |
---|---|
செயிஸ்ட கானின் சித்திரம் | |
பிறப்பு | கிபி 1600[1] |
இறப்பு | 1694 (வயது 94) |
மற்ற பெயர்கள் | மிர்சா அபு தாலிப் |
பணி | முகலாயப் பேரரசின் ஆளுநர் |
மிர்சா அபு தாலிப் என்ற செயிஸ்ட கான் (Shaista Khan) (வங்காள மொழி: শায়েস্তা খান) முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஆட்சியின் போது வங்காளம் (1658–1669) மற்றும் தக்காண ஆளுநராகவும் (1658–1669) , தலைமைப் படைத்தலவராகவும் பணியாற்றியவர். இவர் அவுரகசீப்பின் தாய்மாமன் ஆவார்.[2]
சிவாஜியுடன் மோதல்கள்
[தொகு]
1659-இல் அவுரங்கசீப் முகலாயப் பேரரசர் அரியணையில் அமர்ந்த பின், செயிஸ்ட கானை தக்காணப் பீடபூமி பகுதியில் பெரும்படைகளுடன் ஆளுநராக நியமித்தார். செயிஸ்ட கானின் திறமையால் அமதுநகர் சுல்தானகத்தை கைப்பற்றப்பட்டு, முகலாயப் பேரரசில் இணைக்கப்பட்டது. [3]மேலும் மராட்டியப் பேரரசுக்கு எதிராக பிஜப்பூர் சுல்தானிடம் போர் உடன்படிக்கை செய்து கொண்டார். 1659-இல் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் படைத்தலைவர் அப்சல் கானை கொன்றார்.[4]
சனவரி 1660-இல் செயிஸ்ட கான் அவுரங்காபாத்திற்கு பெரும்படைகளுடன் இறங்கி, மராத்தியர்களுடன் போரிட்டு, புனே சக்கான், கல்யாண், வடக்கு கொங்கணம் பகுதிகளைக் கைப்பற்றினார்.[5]:243, 259–60
மராத்தியர்கள் புனே நகரத்தில் வாழ அனுமதி மறுக்கப்பட்டதுடன், முகலாயப் படைகள் மராத்தியர்களிடமிருந்து தள்ளியே இருந்தனர். 5 ஏப்ரல் 1663 அன்று மாலையில், சிவாஜியும், 4,00 மராத்திய வீரர்களும் திருமணக் கூட்டத்தவர்கள் போல வேடமிட்டு ஊர்வலமாக சென்று புனே நகரத்தில் புகுந்து தங்கினர். மேலும் மராத்தியப் படைத்தலைவர்கள் வேலைக்காரர்கள போன்று வேடமிட்டு சிறு சிறு கூட்டமாக புனே நகரத்தில் சென்றனர். நடு இரவில் மராத்தியப் படைகள் செயிஸ்ட கான் தங்கியிருந்த வளாகத்தில் புகுந்து செயிஸ்டகானை கொல்ல திட்டமிட்டனர். [6][7]
நடு இரவில் தீடீர் எனச் செயிஸ்டகான் தங்கியிருந்த வளாகத்தைச் சுற்றி வளைத்த மராத்தியப் படைகள், செயிஸ்டகானின் படைவீரர்களைக் கொன்றதுடன் செயிஸ்ட கானின் மகனையும் கொன்றனர். சிவாஜி செயிஸ்ட கானை கொல்லப் பாய்ந்த போது, செயிஸ்ட கானின் மூன்று விரல்கள் பறிபோனது. அந்த கலவரத்திற்கிடையே, மராத்தியப் படைகள் புனே நகரத்தை விட்டுச் சென்றது. செயிஸ்ட கானின் தோல்வியை அறிந்த அவுரங்கசீப், செயிஸ்ட கானை வங்காள ஆளுநராக மாற்றினார்.[8]
வங்காள ஆளுநராக
[தொகு]1663-இல் வங்காள ஆளுநர் இரண்டாம் மீர் ஜூம்லாவின் இறப்பிற்கு பின்னர் செயிஸ்ட கான் வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார். செயிஸ்ட கான ஐரோப்பிய நாட்டு வணிகர்களுட்ன ஒப்பந்தம் செய்து கொண்டு, தென்கிழ்ககு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுடன் வணிகம் மேற்கொள்வதை ஊக்கிவித்தார். ஆனால் வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு மட்டும் வணிக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அனுமதி மறுத்தார். இதனால் 1686-இல் ஆங்கிலேய-முகலாயப் போர் மூண்டது.[9]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sir Jadunath Sarkar, History of Aurangzib: Mainly Based on Persian Sources, Volume 5 (1974), p. 283
- ↑ Samaren Roy (May 2005). Calcutta: Society and Change 1690–1990. iUniverse. pp. 52–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-595-34230-3. பார்க்கப்பட்ட நாள் 25 February 2012.
- ↑ Stewart Gordon (1 February 2007). The Marathas 1600-1818. Cambridge University Press. pp. 70–71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-03316-9.
- ↑ Sardesai 1946, G.S. (1946). New history of the Marathas. Vol. I: Shivaji and his line (1600-1701). Bombay: Phoenix Publications. pp. 142–144.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Majumdar, Ramesh Chandra; Pusalker, A. D.; Majumdar, A. K., eds. (2007) [First published 1974]. The History and Culture of the Indian People. Vol. Volume VII: The Mughal Empire. Mumbai: Bharatiya Vidya Bhavan.
{{cite book}}
:|volume=
has extra text (help) - ↑ Sardesai 1946, G.S. (1946). New history of the Marathas. Vol. I: Shivaji and his line (1600-1701). Bombay: Phoenix Publications. pp. 142–144.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Jasper, D., 2006. Celebrating a Region through Historical Commemoration. Region, Culture, and Politics in India, p.239.[1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Chandra, Satish. (2007). History of medieval India : 800-1700. Hyderabad, India: Orient Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-3226-7. இணையக் கணினி நூலக மைய எண் 191849214.
- ↑ Anglo-Mughal War
- Karim, Abdul (1992). History of Bengal: Mughal Period. University of Rajshahi.
- Duff, James Grant (1921) [First published 1826]. History of the Marhattas. Vol. Vol. 1 (Revised Annotated ed.). London: Oxford University Press. Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-09-20.
{{cite book}}
:|volume=
has extra text (help)