பாகிரோஜி பிங்களே
Appearance
பாகிரோஜிபந்த் பிங்களே | |
---|---|
4வது பேஷ்வா, மராத்தியப் பேரரசு | |
பதவியில் 1708 - 1711 | |
ஆட்சியாளர் | முதலாம் சாகுஜி |
முன்னையவர் | இராமசந்திர பந்த் அமத்யா |
பின்னவர் | பரசுராம் பந்த் பிரதிநிதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பெற்றோர் |
|
பைரோன்ஜி பந்த் பிங்களே (Bhaironji Pant Pingale) மராட்டியப் பேரரசர் முதலாம் சாகுஜியின் பேஷ்வா எனும் முதலமைச்சரும், முன்னாள் பேஷ்வா மோராபந்த் திரியம்பக் பிங்ளேயின் இளைய மகனும், முன்னாள் பேஷ்வா நீலகண்ட மொரேஷ்வர் பிங்களேயின் தம்பியும் ஆவார்.
1711ல் கடற்படைத் தலைவர் கனோஜி ஆங்கரே சதாரா மாவட்டத் தாக்குதலில், பாகிரோஜி பிங்களேவை போர்க் கைதியாக பிடித்துச் சென்றார். உடனே பேரரசர் முதலாம் சாகுஜி, பாலாஜி விஸ்வநாத்தை படைகளுடன் அனுப்பி, பாகிரோஜி பிங்களேவை கனோஜி ஆங்கரேவிடம் பேசி விடுவித்தார். அதுமுதல் பாலாஜி விஸ்வநாத் வாரிசுகளுக்கு மராத்தியப் பேரரசில் பரம்பரை பேஷ்வா எனும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.