முதலாம் சாகுஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் சாகுஜி போன்சலே
Shahuji I Bhonsle
மராட்டியப் பேரரசின் சத்ரபதி
ஆட்சிக்காலம்1684 முதல் 1712 வரை
முன்னையவர்வெங்கோஜி
பின்னையவர்முதலாம் சரபோஜி
பிறப்பு1672
இறப்பு1712
மரபுபோன்சலே
தந்தைவெங்கோஜி
மதம்இந்து

முதலாம் சாகுஜி போன்சலே (Shahuji I Bhonsle (மராத்தி: शाहुजी १/शहाजी तंजावरचे)(b.1672) ஷாஜி என்று அழைக்கப்படும் இவர் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய போன்சலே மரபின் இரண்டாவது மன்னராவார். இவர் சிவாஜியின் சகோதரரும் தஞ்சாவூரின் முதல் மராத்திய மன்னருமான வெங்கோஜியின் மூத்த மகனாவார். இவர் 1684 முதல் 1712வரை ஆட்சி செய்தார்.

பதவியேற்றல்[தொகு]

முதல் தஞ்சை மராத்திய மன்னரும், இவரது தந்தையுமான எக்கோஜி என்னும் வெங்கோஜி இறந்ததையடுத்து, 1684இல் ஷாஜி தன் 12 ஆவது வயதில் மன்னராக பதவியேற்றார்.

ஜுபில்கர் கானின் தொடர் போர்கள்[தொகு]

சிவாஜி இறந்த பிறகு முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் தக்காண தொடர் போர்கள் உச்சமடைந்தன. அவரின் இந்தப் போர்களால் 1687இல் தக்காண சுல்தானகங்கள் மொகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்டன. மேலும் சிவாஜியின் மூத்த மகனான சம்பாஜி கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். எனினும் சிவாஜியின் இரண்டாவது மகனான இராஜாராம் மற்றும் அவரது மனைவி தாராபாய் ஆகியோரின் துணிச்சலான எதிர்ப்பு நடவடிக்கைகளால் மராட்டியப் போரரசின் அழிவு தடுத்து நிறுத்தப்பட்டது. 1689 மார்ச் 25இல் மராத்தியரின் தலைமையகமாக இருந்த ராய்கட் கோட்டையை முகலாயர்கள் கைப்பற்றினர். இதனால் மராத்தியப் பேரரசின் தற்காலிகத் தலைநகரமாக செஞ்சிக் கோட்டை மாற்றப்பட்டது. 1693 ஆம் ஆண்டில் ராஜராம் தனது தாயாதியான தஞ்சாவூர் அரசரால் வழங்கப்பட்ட 20,000 பேர் கொண்ட படையுடன் செஞ்சியில் தங்கினார்.

இதனால் ஔரங்கசீப் தனது தளபதியான ஜுல்பிர்கானின் தலைமையில் செஞ்சியை நோக்கி படைகளை அனுப்பி, செஞ்சியைக் கைப்பற்றினார். செஞ்சியில் இருந்து மராட்டியர்கள் தஞ்சாவூருக்குத் தப்பிச் சென்றனர். 1691 ஆண்டிலிருந்து தஞ்சாவூரானது தங்கள் இறையாண்மையை தக்க வைத்துக் கொள்ள முகலாயர்களுக்கு நான்கு லட்சம் கப்பம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.

போர்களும் வெற்றிகளும்[தொகு]

பட்டுக்கோட்டையில் கிடைத்த ஒரு கல்வெட்டின்படி பாம்பன் மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு அனைத்தையும் ஷாஜியின் பிரதிநிதியும், கங்காதரன் என்பவரின் மகனுமான பாபாஜி என்பவர் வென்று, ஒரு கோட்டையைக் கட்டியதாக குறிப்பிடுகிறது. மேலும் இந்தக் கல்வெட்டானது மறவர்களுக்கு ஷாஜி உதவிகள் புரிந்தார் என்கிறது. ஷாஜியுடன் நல்லுறவில் இருந்தத இராமநாதபுர சேதுபதி மீது 1700இல் திருச்சிராப்பள்ளியில் இருந்து இராணி மங்கம்மாள் படையெடுத்தார். இப்போரில் மங்கம்மாளின் படைகள் பெரும் தோல்வியுற்றன. தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதனைத் தடுக்க மைசூர் உடையர் முயன்றார். அப்போது மங்கம்மாளுடன் உள்ள பகையை மறந்து இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. இதனால் போர் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை அப்போது முடிவடைந்தது.

பிற்கால வாழ்கை[தொகு]

1712இல் அரியாசனத்தை விட்டு இறங்கிய ஷாஜி தன் தம்பி சரபோஜிக்கு முடிசூட்டிவிட்டு துறவு மேற்கொண்டார்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 'The Maratha Rajas of Tanjore' by K.R.Subramanian, 1928.
முதலாம் சாகுஜி
முன்னர் தஞ்சை அரசர்
1684-1712
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சாகுஜி&oldid=3935836" இலிருந்து மீள்விக்கப்பட்டது