பாம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாம்பன்
—  இரண்டாம் நிலை ஊராட்சி  —
பாம்பன்
இருப்பிடம்: பாம்பன்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 9°16′36″N 79°13′34″E / 9.2767109999999°N 79.22623799999°E / 9.2767109999999; 79.22623799999ஆள்கூற்று: 9°16′36″N 79°13′34″E / 9.2767109999999°N 79.22623799999°E / 9.2767109999999; 79.22623799999
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி
ஊராட்சி தலைவர் ---
மக்களவைத் தொகுதி பாம்பன்
மக்கள் தொகை 37,819 (2011)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

பாம்பன் என்ற ஊா் பாக்கு நீாிணையில் அமைந்துள்ள பாம்பன் தீவின் தொடக்கமாகவும் இராமேசுவர வட்டத்தின் ஒரு நிா்வாக கிராமமாகவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓா் இரண்டாம் நிலை ஊராட்சி ஆகும். பாம்பனையும் இராமேஸ்வரத்தையும் கடல் வழியாக இணைப்பது இங்குள்ள பாம்பன் பாலம் ஆகும். இங்கு இந்தியாவின் பெரிய பாம்பன் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் அமைந்துள்ளது.

பாம்பனில் உள்ள இரு பாலங்களும் ஊாின் நுழைவாயிலில் அழகு சோ்க்கின்றன. பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் பாம்பனையும் இணைக்கும் ஒரு கொடுங்கைப் பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில்பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும்.

மேலும் பாம்பன் தீவானது, தமிழ் நாட்டிலுள்ள தீவுகளில் மிகப் பொியது. இவ்வுாில் மீன் பிடித்தொழில் மிக முக்கியத் தொழில் ஆகும். இங்கு பரம்பரையாகக் கிறித்தவா்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, மொத்த மக்கள் தொகை 37,819 மற்றும் வீடுகளின் எண்ணிக்கை 8522 இதில் 0-6 வயதுடையோா் எண்ணிக்கை 4,582,எழுத்தறிவு சதவீதம் 74.84, ஆண் பெண் பாலின விகிதம் 973 ஆகும்.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

பாம்பன் சாலை மற்றும் இரயில் போக்குவரத்து வசதிகள் நன்கு பெற்ற ஊராகும். மேலும் பாம்பன் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதியைப் பெற்றுள்ளது.

ஆன்மிக இடங்கள்[தொகு]

1) புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், பாம்பன் 2) புனித அந்தோணியாா் தேவாலயம், பாம்பன் 3) புனித சவோியாா் தேவாலயம், அக்காள் மடம் 4) பாம்பன் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் 5) பள்ளி வாசல், பாம்பன்

கல்வி நிறுவனங்கள்[தொகு]

1) புனித அந்தோணியாா் நடுநிலைப்பள்ளி, பாம்பன் 2) புனித அன்னம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பாம்பன் 3) காமரஜா் நடுநிலைப்பள்ளி, பாம்பன் 4) அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பன் 5) கிாிகனி தொழிற் பயிற்சி மையம், பாம்பன் மற்றும் பல.....

சுற்றுலா இடங்கள்[தொகு]

1) பாம்பன் பாலம் 2) விவேகானந்தா் நினைவு மண்டபம் (குந்துக்கால்) 3) குருசடைத் தீவு 4) கலங்கரை விளக்கம் 5) குந்துக்கால் கடற்கரை 6) பாம்பன் கடல் மீன் காட்சியகம்

மேற்கோள்கள்:[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பன்&oldid=2567495" இருந்து மீள்விக்கப்பட்டது