பாம்பன் கலங்கரை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாம்பன் கலங்கரை விளக்கம்
Pamban lighthouse, Rameswaram.jpg
பாம்பன் கலங்கரை விளக்கம்
பாம்பன் கலங்கரை விளக்கம் is located in தமிழ் நாடு
பாம்பன் கலங்கரை விளக்கம்
பாம்பன் கலங்கரை விளக்கம்
Tamil Nadu
அமைவிடம்இந்தியா
தமிழ்நாடு
பாம்பன்
ஆள்கூற்று9°17′17″N 79°13′07″E / 9.288145°N 79.218554°E / 9.288145; 79.218554ஆள்கூறுகள்: 9°17′17″N 79°13′07″E / 9.288145°N 79.218554°E / 9.288145; 79.218554
கட்டப்பட்டது1845 (முதலில்)
ஒளியூட்டப்பட்டது1879 (புதுப்பிப்பு)
கட்டுமானம்கட்டுமான கோபுரம்
கோபுர வடிவம்மாடம் மற்றும் விளக்கு கொண்ட உருளை கோபுரம்
குறியீடுகள்/அமைப்புவெள்ளை மற்றும் கருப்பு பட்டைகள் கொண்ட கோபுரம், வெள்ளை மாடத்தில் சிவப்புக் கூரை
உயரம்20 மீட்டர்கள் (66 ft)
குவிய உயரம்29 மீட்டர்கள் (95 ft)
சிறப்பியல்புகள்Fl (3) W 9s.
Admiralty எண்F0900
NGA எண்27168
ARLHS எண்IND-048[1]

பாம்பன் கலங்கரை விளக்கம் (Pamban Lighthouse) என்பது தமிழ்நாட்டின் இராமேசுவரம் தீவில் உள்ள இரண்டு கலங்கரை விளக்கங்களில் ஒன்றாகும். [2] இது பாம்பன் வாய்கால் வடமேற்கு முனை கலங்கரை விளக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. [3]

அமைப்பு[தொகு]

பாம்பன் கலங்கரை விளக்கம் முதலில் 1845 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. துவக்கத்தில், இந்த கலங்கரை விளக்கத்திற்கு மீன் எண்ணெய், தாவர எண்ணெய் போன்றவை எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன. 1923 ஆம் ஆண்டு, பாம்பன் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர், மின்சாரம் மூலம் இயங்கும் விளக்குகள் கலங்கரை விளக்கத்தில் பொருத்தப்பட்டன. இது ஒரு உருளை கோபுரமாகவும் இதன் மேல்மாடத்தில் விளக்கு கொண்டதாக அமைக்கப்பட்டது. இது வெள்ளை மற்றும் கருப்பு பட்டைகளாக வண்ணம் பூசப்பட்ட அடையாளத்தோடு காணப்படுகிறது. உச்சியில் வெள்ளை மேல் மாடத்துடன் அதில் சிவப்பு கூரையுடனும் உள்ளது. கலங்கரை விளக்கம் 66 அடி (20 மீ) உயரம் கொண்டதாக உள்ளது. இதில் 9 விநாடிகளுக்கு ஒருமுறை மூன்று வெள்ளை ஒளி பாய்ச்சல்களை வீசுகிறது. இந்த வெளிச்சமானது கரையிலிருந்து 14 கடல் மைல் தொலைவு வரை பார்க்க இயலும். தற்போது, இங்கிருந்து ரேடியோ அலைகள்மூலம் எச்சரிக்கைத் தகவல்களும் அனுப்பப்படுகின்றன.[4]

இந்த கலங்கரை விளக்கமானது பம்பன் பாலத்தின் கிழக்கே பாம்பன் தீவின் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]