தில்லி சண்டை, 1737

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி சண்டை
பிந்தைய முகலாயர்-மராத்தியர் போர்கள் (1728–1763) பகுதி
நாள் 28 மார்ச் 1737
இடம் தல்கட்டோரா
மராத்தியப் பேரரசுக்கு வெற்றி
பிரிவினர்
மராத்தியப் பேரரசு முகலாயப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
பாஜிராவ்
மல்கர் ராவ் ஓல்கர்
வித்தோலி புலே
மீர் ஹசன் கான் கோக்கா[1]
பலம்
70,000 குதிரைப்படை[2] 8,000 தரைப்படை[2][3]

தில்லிப் போர் 28 மார்ச் 1737 அன்று மராத்தியப் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் இடையே தில்லி அருகே தல்கோட்டோரா எனுமிடத்தில் நடைபெற்றது.[4][5][6]இச்சண்டையில் முகலாயப் படைகள் தோற்று[7], மராத்தியப் படைகள் வென்றது. இச்சண்டை மராத்தியப் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற 3 போர்களின் ஒரு பகுதியாகும்.

சண்டையின் விளைவுகள்[தொகு]

தில்லி போரில் மராத்தியர்கள் வெற்றி பெற்றதால் வட இந்தியாவில் மராத்தியப் பேரரசை விரிவாக்கம் செய்ய முடிந்தது.[8][9]தில்லி முகலாயப் படைகளுக்கு உதவ வந்த ஐதராபாத் நிஜாம் படைகள் மற்றும் போபால் நவாப் படைகளுக்கும், மராத்தியப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற போபால் சண்டையில் 24 டிசம்பர் 1737 அன்று ஐதராபாத் மற்றும் போபால் நவாப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.[10][4] போரின் முடிவில் முகலாயர்களிடமிருந்து மராத்தியர்கள் போர் ஈட்டுத் தொகையாக பெரும் அளவில் கப்பம் வசூலித்தனர். மேலும் போர் உடன்படிக்கையால் போபால் நவாப் கட்டுப்பாட்டில் இருந்த மால்வா பகுதியை மராத்தியர்கள் பெற்றனர். இப்போரினாலும், ஆப்கானிய மன்னர் நாதிர் ஷா 1739-இல் தொடுத்த கர்னால் போரினாலும் தில்லி முகலாயப் பேரரசு வலுவிழந்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mehta, Jaswant Lal (2005-01-01) (in en). Advanced Study in the History of Modern India 1707–1813. Sterling Publishers Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-932705-54-6. https://books.google.com/books?id=d1wUgKKzawoC&pg=PA117. 
  2. 2.0 2.1 Dighe, V. G. (1944). Peshwa Bajirao I and Maratha expansion. பக். 136. https://archive.org/details/in.ernet.dli.2015.57399. 
  3. Advance Study in the History of Modern India (Volume-1: 1707–1803) Pg.117
  4. 4.0 4.1 Sen, Sailendra Nath (2010) (in en). An Advanced History of Modern India. Macmillan India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-230-32885-3. https://books.google.com/books?id=bXWiACEwPR8C&pg=PR23. 
  5. Tucker, Spencer C. (2009-12-23) (in en). A Global Chronology of Conflict: From the Ancient World to the Modern Middle East - 6 volumes: From the Ancient World to the Modern Middle East. ABC-CLIO. பக். 732. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85109-672-5. https://books.google.com/books?id=h5_tSnygvbIC&dq=%2522Battle+of+Delhi%2522+1737+-wikipedia&pg=PA732. 
  6. Bowman, John (2000) (in en). Columbia Chronologies of Asian History and Culture. Columbia University Press. பக். 285. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-11004-4. https://books.google.com/books?id=YkqsAgAAQBAJ&pg=PA285. 
  7. Mehta, Jaswant Lal (January 2005). Advanced Study in the History of Modern India 1707–1813. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-932705-54-6. https://books.google.com/books?id=d1wUgKKzawoC&q=Mir+Hasan+Khan+delhi+1737&pg=PA117. 
  8. Jayapalan, N. (2001). History of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171569281. https://books.google.com/books?id=6L6avTlqJNYC&q=Battle+of+Bhopal+1737&pg=PA247. 
  9. Sen, Sailendra Nath (2010). An Advanced History of Modern India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-230-32885-3. https://books.google.com/books?id=bXWiACEwPR8C&q=maratha+delhi+1737&pg=PR23. 
  10. Sen, S. N. (2006) (in en). History Modern India. New Age International. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-224-1774-6. https://books.google.com/books?id=ga-pmgxsWwoC&dq=Bajirao%2520I&pg=PA12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_சண்டை,_1737&oldid=3532300" இலிருந்து மீள்விக்கப்பட்டது