போபால் இராச்சியம்

ஆள்கூறுகள்: 23°15′N 77°24′E / 23.250°N 77.400°E / 23.250; 77.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போபால் இராச்சியம்
भोपाल रियासत / بھوپال ریاست
1707[1]–1949
கொடி of
கொடி
சின்னம் of
சின்னம்
குறிக்கோள்: Nasr Minullah[2]
தலைநகரம்போபால்
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி (அலுவல்) மற்றும் இந்தி-உருது
சமயம்
இந்து சமயம் மற்றும் இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
போபால் நவாப் 
• 1707-1728
தோஸ்த் முகமது கான், போபால் நவாப் (முதல்)
• 1926–1949
ஹமிதுல்லா கான் (இறுதி)
வரலாறு 
• Established
1707[1]
• Disestablished
1 சூன் 1949
முந்தையது
பின்னையது
[[முகலாயப் பேரரசு]]
இந்தியா
தற்போதைய பகுதிகள்மத்தியப் பிரதேசம், இந்தியா
தோஸ்த் முகமது கான், போபால் இராச்சியத்தின் நிறுவனர் (1672–1728)
போபால் இராச்சியத்தின் பக்கத்து இராச்சியங்களான குவாலியர் அரசு மற்றும் இந்தூர் அரசுகளின் வரைபடம்

போபால் இராச்சியம் (Bhopal State), தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை 1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இசுலாமிய நவாப்புகளால் ஆளப்பட்டது.

பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் துணைப்படைத் திட்டத்தின் கீழ், போபால் இராச்சியம், போபால் முகமையில் 1818 முதல் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டத்தின்படி 30 ஏப்ரல் 1949 அன்று இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.[3]

வரலாறு[தொகு]

முகலாயப் பேரரசின் போபால் பகுதியின் படைத்தலைவராக இருந்த ஆப்கானிய பஷ்தூன் இனத்தவரான தோஸ்த் முகமது கான் என்பவர்[4], 1707-இல் போபால் இராச்சியத்தை நிறுவி போபால் நவாப் ஆனார்.

இந்த இராச்சியத்தின் இறுதி நவாப் ஹமிதுல்லா கான் என்பவர் 1926 முதல் 1949 முடிய ஆண்டார். 1819 முதல் 1926 முடிய போபால் இராச்சியத்தை நான்கு அரச குல பெண்கள் ஆண்டனர்.

இந்தியாவுடன் இணைப்பிற்குப் பின் போபால் அரசு[தொகு]

இந்தியாவுடன் இணைந்த போபால் இராச்சியத்தின் முதலமைச்சராக சங்கர் தயாள் சர்மா 1949 முதல் 1956 முடிய பணியாற்றினார். 1956-இல் புதிதாக உருவாக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்துடன் போபால் இராச்சியம் இணைக்கப்பட்டது.

போபால் இராச்சிய ஆட்சியாளர்கள்[தொகு]

 • நவாப் தோஸ்த் முகமது கான் (1707–1728)
 • நவாப் யர் முகமது கான் (1728–1742)
 • நவாப் பைசு முகமது கான் (1742–1777)
 • நவாப் ஹயத் முகமது கான் (1777–1807)
 • நவாப் கௌஸ் முகமது கான் (1807–1826)
 • நவாப் வசீர் முகமது கான் (1807–1816)
 • நவாப் நாசர் முகமது கான் (வசீர் முகமது கானின் மகன்) (1816–1819)
 • குத்சியா பேகம் (கௌஸ் முகமதின் மகள் & நாசர் முகமது கானின் மனைவி) (1819–1837)
 • நவாப் ஜகாங்கீர் முகமது கான் (1837–1844)
 • ஜெகான் பேகம் (1844–1860 மற்றும் 1868–1901)
 • கைகுஸ்ரூ பேகம் (1901–1926)
 • நவாப் ஹமிதுல்லா கான் (1926–1949)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Merriam Webster's Geographical Dictionary, Third Edition. Merriam-Webster. 1997. பக். 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87779-546-9. https://books.google.com/books?id=Co_VIPIJerIC&pg=PA141. பார்த்த நாள்: 10 May 2013. 
 2. Roper Lethbridge (2005). The golden book of India (illustrated ). Aakar. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87879-54-1. 
 3. S. R. Bakshi & O. P. Ralhan (2007). Madhya Pradesh Through the Ages. Sarup & Sons. பக். 360. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7625-806-7. 
 4. John Falconer; James Waterhouse (2009). The Waterhouse albums: central Indian provinces. Mapin. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89995-30-0. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhopal State (1723–1949)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போபால்_இராச்சியம்&oldid=3384716" இருந்து மீள்விக்கப்பட்டது