உதய்பூர் இராச்சியம் அலலது மேவார் இராச்சியம் (Udaipur State or Mewar Kingdom), தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மேவார் பிரதேசத்தை கி பி 730 முதல் சித்தோர்கார் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. பின்னர் உதய்பூர் நகரத்தை புதிய தலைநகராகக் கொண்டு இயங்கியது. உதய்பூர் இராச்சிய மன்னர்கள் தங்களின் முதல் தலைநகரமான நக்டாவில்சகஸ்ரபாகு கோயில்கள் கட்டினர்.
15-ஆம் நூற்றாண்டில் மேற்கு இந்தியாவில் இராணா கும்பா, 15-ஆம் நூற்றாண்டின் தீவிர இந்துக்களின் சக்தியாக விளங்கியவர்.[2]
மகாராணா சங்காராம் சிங், ராணா சங்கா ஆகியோர் முகலாயப் பேரரசின் அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர்.
அக்பர், சித்தோர்கார் கோட்டையைக் கைப்பற்றிய பின்னர், மகாராணா இரண்டாம் உதய் சிங், உதய்பூர் நகரத்தை நிறுவி, மேவார் இராச்சியத்தின் தலைநகரை உதய்பூருக்கு மாற்றியவர்.
மேவாரின் மகாராணா பிரதாப் அக்பரின் தலைமையிலான முகலாயப் பேரரசை கடுமையாக எதிர்த்தவர். [3]
மராத்தியப் பேரரசிற்கு எதிராக நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் உதய்பூர் இராச்சியப் படைகள், பிரித்தானியக் கம்பெனி படைகளுக்கு ஆதரவாக போரிட்டனர். பின்னர் உதய்பூர் இராச்சியம் 31 சனவரி 1818 முதல் துணைப்படைத் திட்டத்தின் கீழ் ஆங்கிலேயருக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக செயல்பட்டது. பிரித்தானிய அதிகார வர்க்கம், மேவார் இராச்சிய மன்னர்களுக்கு, 19 பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செய்தது.[4]உதய்பூர் இராச்சியத்தின் இறுதி மன்னர் பூபால சிங், உதய்பூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் 7 ஏப்ரல் 1949 அன்று கையொப்பமிட்டார். பின்னர் உதய்பூர் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது. [5]
கோசலத்திலிருந்து கி பி இரண்டாம் நூற்றாண்டில் சௌராட்டிர நாட்டில் குடிபெயர்ந்த கனக்சென் என்ற சத்திரியரின் வழித்தோன்றல்களான கலோத்திய வம்சத்தினர் தங்களை வல்லபியின் ஆட்சியாளர்கள் என அழைத்துக் கொண்டனர். பின்னர் இராஜஸ்தானின் இதர் பகுதியைக் கைப்பற்றி ஆண்டனர்.
கி பி 12-ஆம் நூற்றாண்டில் இதர் நகரை விட்டு அகன்ற கலோத்திய வம்ச மன்னர் முதலாம் கரன்சிங்கின் மூத்த மகன் துங்கர்பூரிலும், இளையமகன் சிசோதியாவிலும் தங்கள் ஆட்சியை நிறுவினர். [6]