வல்லபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லபி
வலா
வல்லபி புரம்
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
Languages
 • Officialகுஜராத்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

வல்லபி அல்லது வலபி அல்லது வலா (Vallabhi, Valabhi, or modern Vala) மேற்கு இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்பத்தில், பவநகர் அருகில் அமைந்திருந்த பண்டைய நகரம் ஆகும். இந்நகரம் மைத்திரகப் பேரரசின் தலைநகராக 475 முதல் 767 முடிய விளங்கியது. இந்நகரை வல்லபிபுரம் என்றும் அழைப்பர். அனைத்து இந்திய மதக்கல்விகளின் தலைமை பீடமாக விளங்கியது.

சிறப்பு[தொகு]

வல்லபி நகரம் சமண சமயத்தின் தலைமைப் பீடமாக விளங்கியது. சமண சமய ஆகமங்கள், சமய குருவான ஆச்சார்ய ஷர்மன் தலைமையில் 500 சமணப் பெரியோர்களால் தொகுக்கப்பட்டன. இந்நகரில் சமண சமய தீர்த்தங்கரர்களின் சிலைகளும், கோயில்களும் மற்றும் பௌத்த சமய அறிஞர்களும் நிறைந்திருந்தன.

பௌத்த சமயத்தின் பண்டைய ஆறு பல்கலைக்கழகங்களில், வல்லபியும் ஒன்றாக விளங்கியது. 100 பௌத்த மடாலயங்களும், 6000 பௌத்த பிக்குகளும் இந்நகரில் சமயக் கல்வி கற்றனர் என யுவான் சுவாங் தமது குறிப்புகளில் குறித்துள்ளார்.[1][2]

பாரத நாட்டின் அனைத்து சமய மாணவர்கள், வேதம், தருக்கம், யோகம், மற்றும் தத்துவங்களில் உயர் கல்வி கற்க வல்லபி நகரில் குவிந்த வண்ணமிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லபி&oldid=3331529" இலிருந்து மீள்விக்கப்பட்டது