ராஜ்கர் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ்கர் சமஸ்தானம்
राजगढ़ रियासत
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்–1948
கொடி of ராஜ்கர் சமஸ்தானம்
கொடி
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் ராஜ்கர்
பேசப்படும் மொழிகள்மால்வி, ராங்கிரி மற்றும் இந்தி மொழிகள்
சமயம்
இந்துக்கள் 89%, இசுலாமியர் 6%, இயற்கை வழிபாட்டாளர்கள் 5% மற்றும் பிறர் 1%
வரலாறு 
• தொடக்கம்
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
1948
பின்னையது
}
India
இராஜ்கர் சமஸ்தான மன்னர்

ராஜ்கர் சமஸ்தானம் (Rajgarh State) (இந்தி: राजगढ़), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இது 1818-ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் மத்திய இந்திய முகமையின் கீழ் இருந்தது. 1901-ஆம் ஆண்டில் ராஜ்கர் சமஸ்தானம் 2,492 சதுர கிலோ மீட்டர் (940 சதுர மைல்) பரப்பளவும், 88,376 மக்கள் தொகையும், ஆண்டு வருவாய் ரூபாய் 4,50,000 கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

வரலாறு[தொகு]

தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதிகளை ஆண்ட பரமார வம்சத்தினரின் வழித்தோன்றல்கள், 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராஜ்கர் இராச்சியத்தை நிறுவினர். பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ராஜ்கர் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்று, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் மத்திய இந்திய முகமையில் உள்ள போபால் முகமையின் கீழ் செயல்பட்டது. இராஜ்கர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947 இந்திய விடுதலைக்கு பிறகு, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி, இராஜ்கர் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் இந்தியாவின் மத்திய பாரதம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராஜ்கர் இராச்சியம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்கர்_சமஸ்தானம்&oldid=3377300" இலிருந்து மீள்விக்கப்பட்டது