சத்தர்பூர் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தர்பூர் இராச்சியம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1785–1950

Flag of சத்தர்பூர்

கொடி

Location of சத்தர்பூர்
Location of சத்தர்பூர்
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் சத்தர்பூர் இராச்சியத்தின் அமைவிடம்
தலைநகரம் சத்தர்பூர்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1785
 •  இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1950
Population
 •  1901 10,029 

சத்தர்பூர் இராச்சியம் ( Chhatarpur state), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள சத்தர்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் சத்தர்பூர் நகரம் ஆகும். 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சர்த்தர்பூர் இராச்சியம் 2,927 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 10,029 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.[1] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு[தொகு]

சத்தர்பூர் இராச்சியம் 1785 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. புந்தேல்கண்ட் பகுதியின் புந்தேல இராஜபுத்திர குலத் தலைவர் சத்ராசலின் பெயரால் இந்த நகரம் பெயரிடப்பட்டது. மேலும் அவரது கல்லறை சத்தர்பூரில் அமைந்துள்ளது. இந்த அரசு 1785 ஆண்டு வரை அவரது பரம்பரையினரால் ஆட்சி செய்யப்பட்டது. அதே நேரத்தில் ராஜபுத்திரர்களின் பொன்வார் குலத்தினரால் சத்தர்பூர் கைப்பற்றப்பட்டது.[2]மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சத்தர்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் புந்தேல்கண்ட் முகமையின் கீழ் செயல்பட்டது. சத்தர்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி, 1950-ஆம் ஆண்டில் சத்தர்பூர் இராச்சியம், இந்தியாவின் விந்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சத்தர்பூர் இராச்சியப் பகுதிகள் புந்தேல்கண்ட் பகுதியில், மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. ==ஆட்சியாளர்கள்--

மன்னர்கள்[தொகு]

  • 1785-1816 குன்வர் சோன் ஷா (இறப்பு 1816)
  • 1816–1854 பார்த்தாப் சிங் (இறப்பு 1854)
  • 1854–1867 ஜகத் சிங் (பிறப்பு 1846 - இறப்பு 1867)
  • 1867-1895 விஸ்வநாத் சிங் (பி. 1866 - இ. 1932)

மகாராஜாக்கள்[தொகு]

  • (4 மே 1649 - 20 டிசம்பர் 1731) மகாராஜா சத்ராசல்
  • 1895-1932 விஸ்வநாத் சிங் (பிறப்பு 1866 - இறப்பு 1932)
  • 1932-1947 பவானி சிங் (பிறப்பு 1921 - இறப்பு 2006)[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chhatarpur", 1911 Encyclopædia Britannica, Volume 6, retrieved 2019-11-08 {{citation}}: |volume= has extra text (help)
  2. "CHHATARPUR". 2008-06-23 இம் மூலத்தில் இருந்து 2008-06-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080623182153/http://uqconnect.net/~zzhsoszy/ips/c/chhatarpur.html. 
  3. "Indian states before 1947 A-J". http://rulers.org/indstat1.html. 

வெளி இணைப்புகள்[தொகு]