உள்ளடக்கத்துக்குச் செல்

தோல்பூர் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோல்பூர் அரசு
தோல்பூர்பூர் இராச்சியம்
धौलपुर रियासत
சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1806–1949

Flag of தோல்பூர்

கொடி

Location of தோல்பூர்
Location of தோல்பூர்
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் (இளஞ்சிவப்பு நிறத்தில்) தோல்பூர் அரசின் சமஸ்தானத்தின் அமைவிடம்
தலைநகரம் தோல்பூர்
அரசு முடியாட்சி (1806–1818)
சமஸ்தானம் (1818–1947)
அரசியல்சட்ட முடியாட்சி (1947–1949)
மகாராஜா இராணா
 •  1806–1835 கிராத் சிங் (முதல்)
 •  1911–1949 உதயபானு சிங் (இறுதி)
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1806
 •  இந்திய விடுதலை 1949
பரப்பு
 •  1901 3,038 சதுர மைல் km2 (Expression error: Unrecognized punctuation character "[". sq mi)
Population
 •  1901 250,000 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் இராஜஸ்தான், இந்தியா
1870-இல் தோல்பூர் மன்னர் பகவந் சிங்
தோல்பூர் கேசர்பாக் அரண்மனை, தற்போது தோல்பூர் இராணுவப் பொதுப் பள்ளியாக உள்ளது.


தோல்பூர் சமஸ்தானம் அல்லது தோல்பூர் இராச்சியம் (Dhaulpur State or Kingdom of Dholpur) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தோல்பூர் மாவட்டத்தின் 3038 சதுர மைல் பரப்பளவும், ஆண்டு வருவாய் ரூபாய் 9,60,000 கொண்டிருந்தது.[1] தோல்பூர் இராச்சியத்தை 1806-இல் நிறுவியவர் ஜாட் இன மன்னர் கிராத் சிங் ஆவார்.[2][3][4][5][6] 1817 வரை முடியாட்சியாக விளங்கிய தோல்பூர் இராச்சியம் 1818-இல் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும். இந்திய விடுதலையின் போது 1947 முதல் 1949 வரை இந்த சமஸ்தானம் அரசியல்சட்ட முடியாட்சியாக இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று தோல்பூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[7]

வரலாறு[தொகு]

15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்கு முன்னர், பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியாவில் மட்டும் 565 சமஸ்தானங்கள் (Princely state) இருந்தது.[8][9][10] இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன. [11][12][13]இந்தியா-பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர், 1949ஆம் ஆண்டுக்குள், சிக்கிம் தவிர்ந்த ஏனைய மன்னராட்சி அரசுகள் (சுதேச சமஸ்தானங்கள்) இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ அல்லது வேறொரு நாட்டுடனோ இணைந்தன. சுதந்திர இந்திய அரசுடன் இணைந்த மன்னராட்சி அரசுகள் பட்டியல்:[14] இவற்றில் மைசூர் அரசு, ஐதராபாத் நிசாம், பரோடா அரசு, திருவாங்கூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் இராச்சியம் மட்டுமே பெரிய நிலப்பகுதிகள் கொண்டதாகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் பெரும்பாலன சுதேச சமஸ்தானங்கள் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று விடுதலை இந்தியாவுடன் இணைந்து விட்டன. ஐதராபாத் மற்றும் ஜுனாகத் அரசு போன்ற சமஸ்தானங்களுக்கு எதிராக போரிட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. முன்னதாக ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீர் இராச்சியம் செப்டம்பர் 1947-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V11_330.gif
 2. Princely States
 3. Gazetteer of India, v. 11, p. 323.
 4. John Zubrzycki (2012). The Mysterious Mr Jacob. Random House India. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184003369.
 5. "Dholpur: History and Places".
 6. "Dholpur online".
 7. "Dholpur Princely State (15 gun salute)". Archived from the original on 2015-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.
 8. [WorldStatesmen - India Princely States K-Z
 9. http://www.thefreedictionary.com/Princely+state
 10. http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
 11. [WorldStatesmen - India Princely States K-Z
 12. http://www.thefreedictionary.com/Princely+state
 13. http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
 14. https://flagspot.net/flags/in-princ.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்பூர்_சமஸ்தானம்&oldid=3759618" இலிருந்து மீள்விக்கப்பட்டது