உள்ளடக்கத்துக்குச் செல்

முதோல் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
முதோல் சமஸ்தானம்
ಮುಧೋಳ ಸಂಸ್ಥಾನ
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1465–1948

Flag of

கொடி

Location of
Location of
பிரித்தானிய இந்தியாவின் தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா வரைபடத்தில் முதோல் சமஸ்தானம்
தலைநகரம் முதோல்
வரலாற்றுக் காலம் குடிமைப்பட்ட கால இந்தியா
 •  நிறுவப்பட்டது 1465
 •  1947 இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
தற்காலத்தில் அங்கம் முதோல் தாலுகா, பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா, இந்தியா

முதோல் சமஸ்தானம் (Mudhol State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் முதோல் நகரம் ஆகும். இது தற்கால கர்நாடகா மாநிலத்தின் வடக்கில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தின் முதோல் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு[தொகு]

மராத்திய கோர்படே வம்சத்தினர் 1465-ஆம் ஆண்டில் முதோல் இராச்சியத்தை நிறுவினர். இது மராத்தியப் பேரரசின் ஒரு சிற்றரசாக மாறியது.[1] மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற முதோல் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.

முதோல் சமஸ்தானம் பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. முதோல் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி கில்ச்சிபூர் சமஸ்தானம் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, முதோல் சமஸ்தானப் பகுதிகள் கர்நாடகா மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தின் முதோல் தாலுகாவில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Krishnan, V.S. (1996). Madhya Pradesh District Gazetteers: Rajgarh. Government Central Press. பார்க்கப்பட்ட நாள் 21 October 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதோல்_சமஸ்தானம்&oldid=3379621" இலிருந்து மீள்விக்கப்பட்டது