உள்ளடக்கத்துக்குச் செல்

சச்சின் இராச்சியம்

ஆள்கூறுகள்: 21°05′N 72°53′E / 21.08°N 72.88°E / 21.08; 72.88
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சச்சின் இராச்சியம்
સચીન રિયાસત
سچن ریاست
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1791–1948

Flag of சச்சின்

கொடி

Location of சச்சின்
Location of சச்சின்
சூரத் முகமையில் பிங்க் நிறத்தில் சச்சின் இராச்சியம்
தலைநகரம் சச்சின
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1791
 •  இந்திய விடுதலை, சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1931 127 km2 (49 sq mi)
Population
 •  1931 22,107 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் சூரத் மாவட்டம், குஜராத்
சச்சின் இராச்சியத்தின் நவாப் இரண்டாம் இப்ராகிம் யாகூத் கான் (1833–1873)
சச்சின் இராச்சியக் கப்பலின் கொடி


சச்சின் இராச்சியம் (Sachin State) (குசராத்தி: સચીન રિયાસત; உருது: سچن ریاست‎) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது பம்பாய் மாகாணத்தில் இருந்த சூரத் முகமையின் மேற்பார்வையில் இருந்த இசுலாமிய சுதேச சமஸ்தானம் ஆகும். இதன் தலைநகரம் சச்சின் நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் இருந்தது. 1931-ஆம் ஆண்டில் 127 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்த சச்சின் இராச்சியத்தின் மக்கள் தொகை 22,107 ஆகும்.

வரலாறு

[தொகு]

சச்சின் இராச்சியம் 6 சூன் 1791 அன்று நவாப் முதலாம் அப்துல் கரீம் முகமது யாகூத் கான் என்பவரால் நிறுவப்பட்டது.[1] இந்த இராச்சியத்தின் குடிமக்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் ஆவார். எனும் பஷ்தூன் Abdul Karim Mohammad Yakut Khan I களால் நிறுவப்பட்டது. துவக்கத்தில் சச்சின் இராச்சியம் மராத்தியப் பேரரசின்] பேஷ்வாக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சச்சின் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி, சூரத் முகமையின் கீழ் சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.

இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சச்சின் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சச்சின் இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.[2][3][4]தற்போது சச்சின் இராச்சியம் சூரத் மாவட்டத்தின் பகுதியாக உள்ளது.

சச்சின் இராச்சிய ஆட்சியாளர்கள்

[தொகு]

சச்சின் இராச்சிய ஆட்சியாளர்கள், பிரித்தானிய இந்தியாவின் 9 பீரங்கி குண்டுகள் மரியாதையுடைய சச்சின் இராச்சிய ஆட்சியாளர்கள் நவாப் பட்டத்துடன் ஆட்சி செய்தனர்.

  • 6 சூன் 1791 – 9 சூலை 1802 முதலாம் அப்துல் கரீம் முகமது யாகூத் கான்
  • 9 சூலை 1802 – 25 மார்ச் 1853 முதலாம் இப்ராகிம் முகமது யாகூத் கான்
  • 25 மார்ச் 1853 – 1 டிசம்பர் 1868 இரண்டாம் அப்துல் கரீம் முகமது யாகூத் கான்
  • 1 டிசம்பர் 1868 – 4 மார்ச் 1873 இரண்டாம் இப்ராகிம் முகமது யாகூத் கான்
  • 4 மார்ச் 1873 – 7 சனவரி 1887 அப்துல் காதிர் கான்
  • 4 மார்ச் 1873 – சூலை 1886 .... -அரசப்பிரதிநிதி
  • 7 பிப்ரவரி 1887 – 19 நவம்பர் 1930 மூன்றாம் இப்ராகிம் முகமது யாகூத் கான்
  • 7 பிப்ரவரி 1887 – 4 மே 1907 .... - அரசப்பிரதிநிதி
  • 19 நவம்பர் 1930 – 15 ஆகஸ்டு 1947 ஐதர் முகமது யாகூத் கான்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pandey, Vikash (19 December 2014). "Africans in India: From slaves to reformers and rulers". Newspaper. https://www.bbc.com/news/world-asia-india-30391686. 
  2. Hunter, Sir William Wilson. The Imperial Gazetteer of India. London, Trübner & Co., 1885
  3. Malleson, G. B. An historical sketch of the native states of India, London 1875, Reprint Delhi 1984
  4.   "Surat". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 26. (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_இராச்சியம்&oldid=3368878" இலிருந்து மீள்விக்கப்பட்டது