உள்ளடக்கத்துக்குச் செல்

வான்கனேர் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
வான்கனேர் சமஸ்தானம்
વાંકાનેર રિયાસત
சுதேச சமஸ்தானம்
1807–15 ஆகஸ்டு 1947
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of
Location of
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள மோர்பி மாவட்டத்தில் வான்கேனர் சமஸ்தானத்தின் அமைவிடம்
தலைநகரம் வான்கனேர்
வரலாறு
  நிறுவப்பட்டது 1807
  1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 15 ஆகஸ்டு 1947
Population
  1931 44,259 
தற்காலத்தில் அங்கம் மோர்பி மாவட்டம், சௌராட்டிர தீபகற்பம், குஜராத், இந்தியா
20-ஆம் நூற்றாண்டில் மகாராஜா அமர் சிங் நிறுவிய வான்கனேர் அரண்மனை

வான்கேனர் சமஸ்தானம் (Wankaner State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் வான்கனேர் நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள மோர்பி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வான்கனேர் சமஸ்தானம் 1075 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 44,259 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு

[தொகு]

1620-ஆம் ஆண்டில் சர்தான் சிங் என்பவரால் வான்கனேர் இராச்சியம் நிறுவப்பட்டது. பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த வான்கனேர் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற வான்கனேர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தில் இருந்த கத்தியவார் முகமையில் கீழ் செயல்பட்டது. வான்கனேர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி வான்கனேர் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட சௌராஷ்டிர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று 1956 மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, வான்கனேர் சமஸ்தானம் குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்கனேர்_சமஸ்தானம்&oldid=3377772" இலிருந்து மீள்விக்கப்பட்டது