ஓர்ச்சா சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர்ச்சா இராச்சியம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1531–1950
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of ஓர்ச்சா
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் ஓர்ச்சா இராச்சியம்
தலைநகரம் ஓர்ச்சா, திகம்கர்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1531
 •  1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1950
பரப்பு
 •  1908 5,400 km2 (2,085 sq mi)
Population
 •  1908 321,364 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் திகம்கர் மாவட்டம் & நிவாரி மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா

ஓர்ச்சா இராச்சியம் (Orchha State)[1]இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியில், தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் திகம்கர் மாவட்டம் மற்றும்நிவாரி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த இராச்சியத்தை இராசபுத்திர குலத்தினர் ஆட்சி செய்தனர். [2] இதன் தலைநகரகளாக ஓர்ச்சா மற்றும் திகம்கர் நகரங்கள் இருந்தது. ஓர்ச்சாவில் சதுர்புஜக் கோயிலை நிறுவியவர் ஓர்ச்சா இராணி ஆவார்.[3]ஓர்ச்சா கோட்டை வளாகம் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முடியாட்சியுடன் விளகிய ஓர்ச்சா இராச்சியம் 1811-ஆம் ஆண்டில் பிரித்தானிய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்த புந்தேல்கண்ட் முகமையின் கீழ் சுதேச சமஸ்தான ஆகியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் ஓர்ச்சா இராச்சியம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் திகம்கர் மாவட்டம் & நிவாரி மாவட்டங்களாக உள்ளது.

1908-ஆம் ஆண்டில் ஓர்ச்சா இராச்சியம் 5,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3,21,364 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு[தொகு]

ஓர்ச்சா இராச்சியத்தை 1531-ஆம் ஆண்டில் இராசபுத்திர குலத்த்தைச் சேர்ந்த ருத்திர பிரதாப் சிங் என்பவரால் பேட்வா ஆற்றின் கரையில் நிறுவப்பட்டது.[4]இது முகலாயப் பேரரசில் சிற்றரசாக இருந்தது. பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ஓர்ச்சா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ஓர்ச்சா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது 1936-ஆம் ஆண்டு வரை மத்திய மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. பின்னர் ஐக்கிய மாகாணத்துடன் இணைக்கப்படது. ரேவா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1950-ஆம் ஆண்டில் ஐக்கிய மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஓர்ச்சா இராச்சியம் மத்திய பிரதேச மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

முகலாயப் பேரரசுப் படைகள் ஓர்ச்சாவை கைப்பற்றுதல், அக்டோபர் 1635

ஆட்சியாளர்கள்[தொகு]

மகாராஜா வீர் சிங்
மகாராஜா பிரதாப் சிங்
 • ருத்திர பிரதாப் சிங் (1501–1531)[5]
 • பாரதி சந்த் (1531–1554)[4]
 • மதுகர் ஷா (1554–1592)[6]
 • ராம் ஷா (1592–1605)[6]
 • வீர் சிங் தேவ் (1605–1626/7)[7][8]
 • ஜுஜார் சிங்[ (1626/7–1635)[8] (brother of Hardaul Singh)
 • தேவி சிங் (1635–1641) (brother of Jhujhar Singh)
 • பாகர் சிங் (1641–1653)
 • சுஜன் சிங் (1653–1672)
 • இந்திரமணி சிங் (1672–1675)
 • ஜஸ்வந்த் சிங் (1675–1684)
 • பகவத் சிங் (1684–1689)
 • உதய் சிங்(1689–1735)
 • பிரிதிவி சிங் (1735–1752)
 • சன்வந்த் சிங் (1752–1765)
 • ஹாத்தி சிங் (1765–1768)
 • மான் சிங் (1768–1775)
 • பாரதி சிங் (1775–1776)
 • விக்ரம்ஜித் மகேந்திரா (1776–1817)[8]
 • தரம் பால் (1817–1834)[8]
 • தாஜ் சிங் (1834–1842)[8]
 • சூர்ஜன் சிங்(1842–1848)[8]
 • ஹமிர் சிங் (1848–1865)[8] (இராணி லதாய் சர்க்கர் அரசப்பிரதிநிதி)
 • ஹமிர் சிங் (1865–1874)[8] (இராணி லதாய் சர்க்கர் அரசப்பிரதிநிதி)
 • பிரதாப் சிங்(1874–1930)[8]
 • வீர் சிங் II (4 மார்ச் 1930 – 1 சனவரி 1950)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Imperial Gazetteer of India. 19. Clarendon Press. 1908. பக். 241. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V19_247.gif. 
 2. Mehta, Jaswant Lal (2005) (in English). Advanced Study in the History of Modern India 1707-1813. Sterling Publishers. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-93270-554-6. https://books.google.com/books/about/Advanced_Study_in_the_History_of_Modern.html?id=d1wUgKKzawoC. 
 3. "Chaturbhuj Temple, Orchha". British Library. 26 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 Busch, Allison (2011). Poetry of Kings: The Classical Hindi Literature of Mughal India. Oxford University Press. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19976-592-8. https://books.google.com/books?id=Dl0sbzehWvAC&pg=PA29. 
 5. Busch, Allison (2011). Poetry of Kings: The Classical Hindi Literature of Mughal India. Oxford University Press. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19976-592-8. https://books.google.com/books?id=Dl0sbzehWvAC&pg=PA23. 
 6. 6.0 6.1 Busch, Allison (2011). Poetry of Kings: The Classical Hindi Literature of Mughal India. Oxford University Press. பக். 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19976-592-8. https://books.google.com/books?id=Dl0sbzehWvAC&pg=PA46. 
 7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; BLfort என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 8.8 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; michael என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓர்ச்சா_சமஸ்தானம்&oldid=3373062" இருந்து மீள்விக்கப்பட்டது