பன்னா இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பன்னா இராச்சியம்
पन्ना रियासत
மன்னர் அரசு of பிரித்தானிய இந்தியா
1731–1950
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பன்னா
பிரித்தானிய இந்தியாவின் வரைபடத்தில் பன்னா இராச்சியம்
தலைநகரம் பன்னா
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1731
 •  Disestablished 1950
பரப்பு
 •  1931 6,724 km2 (2,596 sq mi)
Population
 •  1931 2,12,130 
மக்கள்தொகை அடர்த்தி 31.5 /km2  (81.7 /sq mi)
பன்னா இராச்சிய நிறுவனர், சத்திரசால் மற்றும் மராத்திய பேஷ்வா பாஜிராவ்
பன்னா இராச்சிய இளவரசியும், திரிபுரா இராச்சிய இராணியுமான கஞ்சன் பிரபா தேவி, (1947 - 1949)[1]

பன்னா இராச்சியம், இந்தியாவின் தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின், புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள பன்னா மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியது பன்னா இராச்சியம்.

1901ல் புந்தேல்கண்ட் பகுதியில் 6724 சதுர கிமீ பரப்பு கொண்டிருந்த பன்னா இராச்சியத்தில் 1,008 கிராமங்கள் இருந்தது. பன்னா இராச்சியத்தின் தலைநகரமாக பன்னா நகரம் இருந்தது.

வரலாறு[தொகு]

சந்தேல இராசபுத்திர குல மன்னர் சத்திரசால், மராத்திய பேஷ்வா பாஜிராவ் உதவியுடன் முகலாயப் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, 1731-இல் பன்னா இராச்சியத்தை நிறுவினார்.

பன்னா இராச்சிய மன்னர் சத்திரசால் 1732-இல் மறைவிற்குப் பின், பன்னா இராச்சியம், அவரது மகன்களுக்கிடையே பிரித்து வழங்கப்பட்டது. மேலும் இராச்சியத்தின் மூன்றில் ஒரு பங்கு, சத்திரசாலின் மகளான மஸ்தானியை மணந்த மராத்திய பேஷ்வா பாஜிராவுக்கு வழங்கப்பட்டது.[2]

கிபி 19ம் நூற்றாண்டில், பன்னா இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்கு பின்னர், 1 சனவரி 1950-இல் பன்னா இராச்சியம், இந்தியாவின் விந்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, பன்னா மாவட்டமாக மாறியது. இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, 1 நவம்பர் 1956-இல் விந்தியப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 24°16′N 80°10′E / 24.27°N 80.17°E / 24.27; 80.17

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னா_இராச்சியம்&oldid=2629315" இருந்து மீள்விக்கப்பட்டது