காம்பே சமஸ்தானம்
காம்பே சமஸ்தானம் ખંભાત | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
தற்கால குஜராத் மாநிலத்தில் காம்பே சமஸ்தானத்தின் அமைவிடம் | ||||||
வரலாற்றுக் காலம் | பிரித்தானிய இந்தியா | |||||
• | நிறுவப்பட்டது | 1730 | ||||
• | இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
Population | ||||||
• | 1901 | 75,122 | ||||
தற்காலத்தில் அங்கம் | ஆனந்து மாவட்டம், குஜராத், இந்தியா |
காம்பே சமஸ்தானம் (Cambay State, Kambay or Khambhat), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் காம்பத் நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் காம்பே வளைகுடாவில் அமைந்த ஆனந்த் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காம்பே இராச்சியம் 906 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 75,122 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .
வரலாறு[தொகு]
முகலாயப் பேரரசின் இறுதிக் காலத்தில் 1730-ஆம் ஆண்டில் முதலாம் மிர்சா ஜாபர் மூமின் கான் காம்பே இராச்சியத்தை நிறுவினார். பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது காம்பே இராச்சியம். 1802 பசீன் உடன்படிக்கையின் படி மராத்தியப் பேரரசினர் காம்பே சமஸ்தானப் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவிற்கு விட்டு கொடுத்தனர். பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற காம்பே இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.
காம்பே சமஸ்தானம் பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் இருந்த பரோடா மற்றும் குஜராத் முகமையின் கீழ் செயல்பட்டது. காம்பே இராச்சிய நவாப்புகளுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 1948-ஆம் ஆண்டில் காம்பே சமஸ்தானம் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[1] 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, காம்பே சமஸ்தானம் குஜராத் மாநிலத்தின் ஆனந்து மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க[தொகு]
- காம்பத்
- பம்பாய் மாகாணம்
- பரோடா மற்றும் குஜராத் முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Cambay State – Princely State (11 gun salute)". 17 July 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 July 2014 அன்று பார்க்கப்பட்டது.