மாலேர் கோட்லா
மாலேர் கோட்லா இராச்சியம் ਮਲੇਰਕੋਟਲਾ ਰਿਆਸਤ مالیرکوٹلہ ریاست | |||||
மன்னர் அரசு பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
சின்னம் | |||||
குறிக்கோள் சொர்கத்தின் ஒளி எங்களது வழிகாட்டி | |||||
![]() | |||||
தலைநகரம் | மாலேர்கோட்லா | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1657 | |||
• | இந்திய விடுதலை இயக்கம் | 1948 | |||
பரப்பு | |||||
• | 1901 | 433 km2 (167 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 77,506 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 179 /km2 (463.6 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | பஞ்சாபு, இந்தியா ![]() | ||||
![]() |
மாலேர்கோட்லா இராச்சியம் (State of Malerkotla) அல்லது மாலேர் கோட்லா ( Maler Kotla) பிரித்தானிய இந்தியாவில் பஞ்சாப் பகுதியில் அமைந்திருந்த மன்னர் அரசு ஆகும். மாலேர் கோட்லா முஸ்லிம் பெரும்பான்மையுள்ள இராச்சியமாகும். இதனை 1454இல் ஆப்கானித்தானின் சேக் சத்ருத்தீன்-இ-ஜஹான் நிறுவினார்.[1] செர்வானி இனத்தினர் ஆண்டு வந்தனர். மாலேர் கோட்லா இராச்சியம் 1657இல் உருவானது.[2] 1947 கலகங்களின் போது பஞ்சாபின் ஏனைய பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தபோதும் மாலேர் கோட்லா இராச்சியத்தில் ஒரு வன்முறை நிகழ்வும் நடக்கவில்லை. அமைதிப் பூங்காவாக விளங்கியது.[1][3]
மாலேர் கோட்லாவின் கடைசி அரசர் ஆகத்து 20, 1948இல் இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்கு ஒப்பமிட்டார். மாலேர் கோட்லாவின் அரசர்கள் பதான் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தியப் பிரிவினையின் போது கடைசி நவாபு இப்த்கர் அலி கான் இந்தியாவில் தங்கி 1982இல் மரணமடைந்தார். அவர் சிர்கன்டு கேட் அருகிலுள்ள சாகி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அரச குடும்பத்தில் ஒருபகுதியினர் பாக்கித்தான் சென்று அங்கு இலாகூர், முசபர்கர், கான்கர் ஆகியவிடங்களில் வாழ்கின்றனர்.[4]
இதனையும் காண்க[தொகு]
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
- பஞ்சாப் அரசுகள் முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
- பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Goyal, Sushil (August 19, 2006). "‘Malerkotla has Guru’s blessings’". The Tribune. http://www.tribuneindia.com/2006/20060819/saturday/main1.htm. பார்த்த நாள்: 2013-03-24.
- ↑ Venkatesh, Karthik (16 January 2016). "Malerkotla, Where Tolerance is a Way of Life". The Wire இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304082425/http://thewire.in/2016/01/16/malerkotla-where-tolerance-is-a-way-of-life-19294/. பார்த்த நாள்: 22 February 2016.
- ↑ "BRIEF HISTORY OF MALERKOTLA". malerkotla.com. 2016 இம் மூலத்தில் இருந்து 2 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160302010529/http://www.malerkotla.co.in/hist.aspx. பார்த்த நாள்: 22 February 2016.
- ↑ Malerkotla Muslims பரணிடப்பட்டது 2009-09-02 at the வந்தவழி இயந்திரம் The India Express, August 14, 1997.