சர்க்காரி சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
சர்க்காரி சமஸ்தானம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1765–1947
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் சர்க்காரி சமஸ்தானம்
தலைநகரம் சர்க்காரி
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1765
 •  1947 இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1947
Population
 •  1901 1,23,254 
தற்காலத்தில் அங்கம் மகோபா மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா

சர்க்காரி சமஸ்தானம் (Charkhari State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும்.[1] இது தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் உள்ள மகோபா மாவட்டம் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சர்க்காரி இராச்சியம் 2279 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,23,254 மக்கள் தொகையும், ஆண்டு வருமானம் £ 1300 கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு[தொகு]

1765-ஆம் ஆண்டில் இராசபுத்திர குலத்தின் குமான் சிங் என்பவரால் சர்க்காரி இராச்சியம் நிறுவப்பட்டது.[2] பின்னர் விக்ரம்ஜித் சிங் (1782–1829) ஆட்சியின் போது, 1804-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சர்க்காரி இராச்சியத்தினர்[3], ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.

இந்த இராச்சியம் பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணத்தின் (1937–1950) புந்தேல்கண்ட் முகமையின் கீழ் இருந்தது. சர்க்காரி இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சர்க்காரி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சர்க்காரி இராச்சியம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மகோபா மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Princely States of India A-J
  2. "Charkhari". 27 August 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. States before 1947

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்க்காரி_சமஸ்தானம்&oldid=3376354" இருந்து மீள்விக்கப்பட்டது