ரதன்பூர் சமஸ்தானம்
ரதன்பூர் சமஸ்தானம் રાધનપુર રિયાસત | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
சின்னம் | |||||
குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா தீபகற்பதின் வடகிழக்கில் ரதன்பூர் சமஸ்தானம் | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1753 | |||
• | 1947 இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | |||
Population | |||||
• | 1931 | 61,548 | |||
தற்காலத்தில் அங்கம் | பதான் மாவட்டம், குஜராத், இந்தியா |
ரதன்பூர் சமஸ்தானம் (Radhanpur State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா தீபகற்பதின் வடகிழக்கில் பதான் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ரதன்பூர் இராச்சியம் 2978 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 61,548 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .
வரலாறு
[தொகு]முகலாயப் பேரரசில் குஜராத் பிரதேசத்தில் பதான் பகுதிகளுக்கு ஆளுநராக இருந்த படைத்தலைவர் ஜவான் இரண்டாம் மர்டு கான், 1753-ஆம் ஆண்டில் பதான் மாவட்டத்தின் ரதன்பூர் பகுதிகளுக்கு நவப்பாக முடிசூட்டிக் கொண்டார். பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ரதன்பூர் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர், 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.
இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாண ஆளுநரின் கட்டுப்பாட்டில் பாலன்பூர் முகமையின் கீழ் செயல்பட்டது. ரதன்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி ரதன்பூர் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ரதன்பூர் இராச்சியம் குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]- சௌராட்டிர தீபகற்பம்
- பதான் மாவட்டம்
- பம்பாய் மாகாணம்
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா