நாகோட் சமஸ்தானம்
Warning: Value not specified for "common_name" | |||||
நாகோட் சமஸ்தானம் नागोड़ रियासत | |||||
சுதேச சமஸ்தானம் | |||||
| |||||
கொடி | |||||
பிரித்தானிய இந்தியாவின் தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா வரைபடத்தில் நாகோட் சமஸ்தானம் | |||||
வரலாற்றுக் காலம் | குடிமைப்பட்ட கால இந்தியா | ||||
• | நிறுவப்பட்டது | 1344 | |||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1950 | |||
Population | |||||
• | 1901 | 67,092 | |||
தற்காலத்தில் அங்கம் | சத்னா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
நாகோட் சமஸ்தானம் (Nagod State (also known as 'Nagode' and 'Nagodh'), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் நாகோட் ஆகும். இது தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த சத்னா மாவட்டத்தின் நாகோட் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது..[1] 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாகோட் சமஸ்தானம் 1,298 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 67,092 மக்கள் தொகையும், கொண்டிருந்தது. நாகோட் சமஸ்தான ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .
வரலாறு
[தொகு]நாகோட் இராச்சியத்தை 1344-ஆம் ஆண்டில் இராஜபுத்திர குல மன்னர் வீரராஜ் ஜுதேவ் என்பவர் நிறுவினார். 1807-ஆம் ஆண்டில் பன்னா இராச்சியத்தின் கீழ் நாகோட் இராச்சியம் சிற்றரசாகியது. பின்னர் நாகோட் இராச்சியம் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது.
மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். எனவே 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற நாகோட் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். நாகோட் சமஸ்தானம் பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணத்தின் (1861–1936) மத்திய இந்திய முகமையில் உள்ள பகேல்கண்ட் முகமையில் செயல்பட்டது.[2] நாகோட் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி நாகோட் சமஸ்தானம் புதிதாக நிறுவப்பட்ட விந்தியப் பிரதேசம் (1948–1956) மாநிலத்துடன் இணைக்கப்பட்டது 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, நாகோட் சமஸ்தானப் பகுதிகள் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சத்னா மாவட்டத்தின் நாகோட் தாலுகாவில் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]- விந்தியப் பிரதேசம் (1948–1956)
- மத்திய இந்திய முகமை
- பகேல்கண்ட்
- சத்னா மாவட்டம்
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ David P. Henige (2004). Princely states of India: a guide to chronology and rulers. Orchid Press. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-974-524-049-0.
- ↑ "Nagode". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 19. (1911). Cambridge University Press.