உள்ளடக்கத்துக்குச் செல்

யாங்சே சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
யாங்சே சமஸ்தானம்
ယွင်ႈႁူၺ်ႈ
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1359–1959
Location of
Location of
சான் மாகாணத்தின் பழுப்பு நிறத்தில் யாங்சே சமஸ்தானம்
வரலாற்றுக் காலம் குடிமைப்பட்ட கால மியான்மர்
  யாங்சே இராச்சியம் 1359
  இறுதியாக பர்மாவின் சாவ்பாவுடன் இணைத்தல் 1959
Population
  1901 95,339 
யாங்சே சமஸ்தான இளவரசி சாவ் நாங் ஹெரன் காம், ஆண்டு 1947
பவுங் தா ஊ பகோடா திருவிழா

யாங்சே சமஸ்தானம் (Yawnghwe), தற்கால பர்மா எனும் மியான்மர் நாட்டின் விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் நியாங் சவே நகரம் ஆகும்.[1] இது தற்கால மியான்மர் நாட்டின் சான் மாகாணத்தின் தெற்கில் யாங்சே இராச்சியப் பகுதிகளை கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, யாங்சே சமஸ்தானம் 2241 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 95,339 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு

[தொகு]

1359-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட யாங்சே இராச்சியம், நவம்பர் 1885-ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில் பர்மா முழுவதும் பிரித்தானிய இந்தியாவின் கீழ் வந்தது. 1887-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற யாங்சே இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். யாங்சே இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1948-ஆம் ஆண்டில் பர்மாவின் விடுதலைக்குப் பின்னர் யாங்சே இராச்சியம், 1959-ஆம் ஆண்டில் பர்மாவின் சாவ்பா மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "WHKMLA : History of the Shan States". 18 May 2010. Retrieved 21 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்சே_சமஸ்தானம்&oldid=3886232" இலிருந்து மீள்விக்கப்பட்டது