உள்ளடக்கத்துக்குச் செல்

மண்டி சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டி இராச்சியம்
मण्डी रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1290–1948

Flag of மண்டி

கொடி

Location of மண்டி
Location of மண்டி
1911-இல் சிம்லா மலைப் பகுதியின் தெற்கில் மண்டி இராச்சியம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1290
 •  இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1941 2,950 km2 (1,139 sq mi)
Population
 •  1941 232,598 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் மண்டி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
மண்டி இராச்சிய மன்னர் ஈஸ்வரி சென்

மண்டி சமஸ்தானம் (Mandi State) 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மண்டி இராச்சியம் 2950 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 2,32,598 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். மண்டி சமஸ்தானத்திற்கு தெற்கில் பிலாஸ்பூர் சமஸ்தானம் மற்றும் சுகேத் சமஸ்தானம், மேற்கில் காங்கிரா சமஸ்தானம் மற்றும் வடமேற்கில் சம்பா சமஸ்தானம் எல்லைகளாக கொண்டது. இது பஞ்சாப் மாகாண ஆளுநரின் கீழ் செயல்பட்டது

வரலாறு

[தொகு]

1527/1534-ஆம் ஆண்டில் அஜ்பார் சென் என்பவர் மண்டி இராச்சியத்தை நிறுவினார். முகலாயப் பேரரசு மற்றும் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த மண்டி இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற மண்டி சமஸ்தான மன்னரகள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பஞ்சாப் மாகாணத்தின் பஞ்சாப் அரசுகள் முகமையின் கீழ் செயல்பட்டது.[1] மண்டி இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.[2]

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி மண்டி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சுகேத் இராச்சியம் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1.   "Mandi". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 17. (1911). Cambridge University Press. 
  2. "Mandi Princely State (11 gun salute)". Archived from the original on 2019-07-24. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டி_சமஸ்தானம்&oldid=3590656" இலிருந்து மீள்விக்கப்பட்டது