ஜவ்கார் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவ்கார் சமஸ்தானம்
जव्हार रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1343–1947
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of ஜவ்கார் இராச்சியம்
Location of ஜவ்கார் இராச்சியம்
பிரித்தானிய இந்தியாவின் தானே முகமையில் (சிவப்பு நிறத்தில்) ஜவ்கார் சமஸ்தானம்
தலைநகரம் ஜவ்கார்
அரசு முடியாட்சி
வரலாற்றுக் காலம் குடிமைப்பட்ட கால இந்தியா
 •  நிறுவப்பட்டது 1343
 •  இந்திய விடுதலை, சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1947
Population
 •  1901 50,538 
தற்காலத்தில் அங்கம் ஜவ்ஹார் தாலுகா, பால்கர் மாவட்டம், பால்கர் மாவட்டம், இந்தியா  இந்தியா
1855-ஆம் ஆண்டில் ஜவ்கார் சமஸ்தானத்தின் வரைபடம்
பிரித்தானிய இந்தியாவின் தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா வரைபடத்தில் ஜவ்கார் சமஸ்தானம்

ஜவ்கார் சமஸ்தானம் (Jawhar State)[1] 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தின் ஜவ்ஹார் தாலுகா பகுதிகளை கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜவ்கார் சமஸ்தானம் 1383 சதுர மைல் பரப்பளவும்[2], 50,538 மக்கள் தொகை கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

இந்திய விடுதலைக்குப் பிறகு ஜவ்கார் சமஸ்தானம், பம்பாய் மாகாணத்தின் தானே மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. பின்னர் 1 ஆகஸ்டு 2014 அன்று புதிதாக நிறுவப்பட்ட பால்கர் மாவட்டத்தின் ஜவ்ஹார் தாலுகாவில் ஜவ்கார் சமஸ்தானப் பகுதிகள் இணைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

ஜவ்கார் சமஸ்தானத்தின் இறுதி மகாராஜா யஷ்வந்த்ராவ் மார்த்தாண்ட ராவ் முக்னே
ஜவ்கார் சமஸ்தானத்தின் இறுதி மகாராணி பிரியம்வந்தே

1343-ஆம் ஆண்டில் கோலி இனத்தின் ஜெயதேவ் ராவ் ஜவ்கார் இராச்சியத்தை நிறுவினார்.[3] 1664-ஆம் ஆண்டு முதல் ஜவ்கார் இராச்சியம், மராத்தியப் பேரரசில் ஒரு சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் ஜவ்கார் இராச்சிய மன்னர்கள், 1118-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்று, பிரித்தானிய இந்தியாவிற்கு கீழ் ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் தானே முகமையின் கீழ் செயல்பட்டது. ஜவ்கார் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

ஆட்சியாளர்கள்[தொகு]

 • [1300–1337] ஜெயதேவ் முக்னே
 • [1337-1388] முதலாம் நெம்ஷா முக்னே
 • [1388–1429] பீமாராவ் முக்னே
 • [1429–1492] தேவ்ராவ்
 • [1492-1560] முதலாம் கிருஷ்ணாராவ்
 • [1560–1630] இரண்டாம் நெம்ஷா கிருஷ்ண ஷா
 • [1630-1678] விக்ரம் ஷா முக்னே
 • [1678-1694] முதலாம் பதாங் ஷா
 • [1694–1710] இரண்டாம் கிருஷ்ண ஷா
 • [1710–1742] இரண்டாம் விக்ரம் ஷா
 • [1742-1758] மூன்றாம் கிருஷ்ண ஷா
 • [1758-1798] இரண்டாம் பதாங் ஷா
 • [1798–1821] மூன்றாம் விக்ரம் ஷா
 • [1821 – சூன் 1865] மூன்றாம் பதாங் ஷா
 • [29 சூன் 1865-சூலை 1865] நான்காம் விக்ரம் ஷா
 • [சூலை 1865–1905] நான்காம் பதாங் ஷா
 • [1905 – 1917]கணபதி ராவ் முக்னே
 • [1917–10 டிசம்பர் 1927] மார்த்தாண்ட ராவ் முக்னே
 • [10 டிசம்பர் 1927–15 ஆகஸ்டு 1947] யஷ்வந்த் ராவ் மார்த்தாண்ட ராவ் முக்னே[4][5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Administration
 2. Thornton, Edward (1886) (in en). A Gazetteer of the Territories Under the Government of the Viceroy of India. W. H. Allen & Company. https://books.google.com/books?id=Gkzw0SYEKk4C&q=Jawhar+State+Area&pg=PA379. 
 3. "Imperial Gazetteer2 of India, Volume 14, page 87 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
 4. "Indian Princely States before 1947 A-J". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
 5. "Indian states before 1947 A-J". rulers.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
 • Administration Report of Jowar State. 1873/4, 1876/77-1878/79, 1880/81-1884/5. IOR/V/10. India Office Records, British Library, St Pancras, London.
 • Administration Report of Jawhar State. 1889/90-1897/98, 1910/11-1928/29. IOR/V/10. India Office Records, British Library, St Pancras, London.
 • C.U. Aitchison. A Collection of Treaties, Engagements and Sanads Relating to India and Neighbouring Countries. Vol. VII Containing The Treaties, &c., Relating to the Bombay Presidency. Part II-Kutch Agency, Cambay, Surat Agency, Jauhar, Janjira, Satara Jagirdars, Kolhapur and Southern Maratha Country Agency, Sawantwari Savanur Nasik Agency, Sind and Lapsed States. Revised and continued up to 1 June 1906 By the Authority of the Foreign Department. Superintendent Government Printing, India. Calcutta, 1909.
 • Gazetteer of the Bombay Presidency. Thana District. Parts I and II. Superintendent of Government Printing, Bombay, 1882.
 • The Indian & Pakistan Year Book & Who's Who 1948. The Times of India Press, Bombay, 1948.
 • Report on the Annual Administration of the Jawhar State. 1929/30-1944/45. IOR/V/10. India Office Records, British Library, St Pancras, London.
 • List of Ruling Princes and Chiefs in Political Relations with the Government of Bombay and their Leading Officials, Nobles and Personages. Government of India Central Publication Branch, Calcutta, 1931.
 • Saville Marriott and R.H. Showell, "Rough Notes Connected with the petty Estate of Jowar, in the Tanna Collectorate".
 • Selections from the Records of the Bombay Government. No. XXVI - New Series, Political Department, Government of Bombay, 1856. H.H. Raja Yeshwantrao (Maharaja of Jawhar). Jayaba. T&A Constable Ltd for H.H. The Maharaja of Jawhar, Edinburgh, 1970.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவ்கார்_சமஸ்தானம்&oldid=3379461" இலிருந்து மீள்விக்கப்பட்டது