உள்ளடக்கத்துக்குச் செல்

சித்ரால் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ریاست چترال
1320–1969
கொடி of சித்ரால் இராச்சியம்
State flag
சின்னம் of சித்ரால் இராச்சியம்
சின்னம்
நிலைசுதேச சமஸ்தானம்
தலைநகரம்சித்ரால்
அரசாங்கம்முடியாட்சி
மெஹ்தர் 
வரலாறு 
• தொடக்கம்
1320
• ராயீஸ் வம்சம்
1320
• கடூர் வம்சம்
1571
1885
1919
1969
முந்தையது
பின்னையது
சகதாய் கானேட்
மேற்கு பாகிஸ்தான்
தற்போதைய பகுதிகள்சித்ரால் மாவட்ட்ம், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
சித்ரால்
சுதேச சமஸ்தானம் பாகிஸ்தான்
14 ஆகஸ்டு 1947–28 சூலை 1969

Flag of சித்ரால்

கொடி

Location of சித்ரால்
Location of சித்ரால்
பாகிஸ்தானில் சித்ரால் இராச்சியத்தின் அமைவிடம்
தலைநகரம் சித்ரால்
அரசு முடியாட்சி
வரலாறு
 •  நிறுவப்பட்டது 14 ஆகஸ்டு 1947
 •  Disestablished 28 சூலை 1969

சித்ரால் இராச்சியம் ('Chitral state) (உருது: چترال‎ and ریاست چترال) 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும்.இதன் தலைநகரம் சித்ரால் நகரம் ஆகும். இந்த இராச்சியம் இந்து குஷ் மலையில் 7,708 m (25,289 ft) உயரத்தில் இருந்தது. இது தற்கால பாகித்தான் நாட்டின், ஆப்கானித்தான் எல்லைப்பகுதியில் அமைந்த கைபர் பக்துன்வா மாநிலத்தின் சித்ரால் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

வரலாறு

[தொகு]

1320-இல் ராயீஸ் வம்சத்தவர்களால் நிறுவப்பட்ட சித்ரால் இராச்சியம், பின்னர் 1571-ஆம் ஆண்டு முதல் கடூர் வம்சத்தவர்களால் ஆளப்பட்டது. 1885-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சித்ரால் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் செயல்பட்டது. சித்ரால் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1969-ஆம் ஆண்டில் சித்திரால் இராச்சியம் மேற்கு பாக்கித்தானில் உள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அமைந்த சித்ரால் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் கைபர் பக்துன்வா மாகாணத்தில் சித்திரால் மாவட்டம் இணைக்கப்பட்ட பின்னர் 2018-ஆம் ஆண்டில் சித்ரால் மாவட்டம் மேல் சித்ரால் மாவட்டம் மற்றும் கீழ் சித்ரால் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்

[தொகு]

கதோர் வம்ச ஆட்சியாளர்கள்:

  1. இரண்டாம் ஷா அப்சல் 1838
  2. மூன்றாம் முக்தார்ரம் ஷா கடோர் 1854
  3. அமானுல் முல்க் 1856
  4. அப்சல் உல் முல்க் 1892
  5. செர் அப்சல் 1892
  6. நிஜாம் உல் முல்க் மெக்தர் 1892
  7. அமீர் உல் முல்க் 1895
  8. சூஜா உல் முல்க் 1895
  9. நசீர் உல் முல்க் 1936
  10. முசாபர் உல் முல்க் 1943
  11. சையிப் உர் ரகுமான் 1949
  12. முகமது சையிப் உல் முல்க் நசீர் 1954

வடமேற்கு எல்லைப் பகுதி மன்னராட்சி அரசுகள்

[தொகு]
  1. அம்பு இராச்சியம் (Amb State)
  2. தீர் இராச்சியம் (State of Dir)
  3. புல்ரா இராச்சியம (Phulra princely state)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Pastakia, Firuza (2004). Chitral: A Study in Statecraft (1320–1969) (PDF). Peshawar, Pakistan: IUCN Pakistan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789698141691. இணையக் கணினி நூலக மைய எண் 61520660. பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.
  • History of Chitral: An Outline
  • Tarikh-e-Chitral
  • Chitral States Judicial System
  • Tribes of the Hindoo Koosh by John Biddulph

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரால்_இராச்சியம்&oldid=3376839" இலிருந்து மீள்விக்கப்பட்டது