கோலி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலி
कोली, કોલી, कोळी
ஓவியக் கலைஞர் யேம்சு போர்ப்சு, 1813-ல் வரைந்த ஒரு கோலி தலைவரின் உருவப்படம்
மொழி(கள்)
இந்தி, குஜராத்தி, மராத்தி, கோலி, கொங்கணி, கன்னடம்
சமயங்கள்
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கோரி, கோல்கி, கோலி கிறித்துவர்
பாரம்பரிய உடையில் ஒரு கோலி சிறுவன்
பாரம்பரிய உடையான 'கஷ்டா'வில் நிகழ்ச்சிகளை வழங்கும் ஒரு கோலி பெண்

கோலி ( Koli ) என்பது இந்தியாவில் உள்ள ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், குசராத்து, மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், அரியானா, கருநாடகம்,[1] ஒடிசா [2] , ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் காணப்படும் ஒரு இந்தியச் சாதியாகும் . [3] கோலி குசராத்தைச் சேர்ந்த ஒரு விவசாய சாதி, ஆனால் கடலோரப் பகுதிகளில் இவர்கள் விவசாயத்துடன் மீனவர்களாகவும் வேலை செய்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதலாம் உலகப் போரின் போது கோலி சாதியினரின் கொள்ளை, கொலை, கப்பம் மற்றும் பயிர் மற்றும் விலங்கு திருட்டு போன்ற சமூக விரோத செயல்களால் பிரித்தானிய இந்திய அரசாங்கத்தால் குற்றப் பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டனர். குசராத்து மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கோலி சாதியினர், அந்த மாநிலங்களில் உள்ள மொத்த மக்கள் தொகையில் முறையே 24% மற்றும் 30% வீதத்தைக் கொண்ட மிகப் பெரிய சாதிக் கூட்டமாக உள்ளனர். [4] [5]

வரலாறு[தொகு]

ஆரம்ப காலம்[தொகு]

ஒரு கோலி பெண்

தற்போது குசராத்து மாநிலத்தில் உள்ள மக்களை கோலி அல்லது பில் மக்கள் என்று அடையாளம் காண்பதில் வரலாற்று ரீதியாக சில சிரமங்கள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள மலைகளில் இரு சமூகங்களும் இணைந்து வாழ்ந்தன. இன்றும் அவர்களின் அடையாளம் பற்றிய குழப்பம் உள்ளது. சமூகவியலாளர் அரவிந்த் ஷாவின் கருத்துப்படி, கோலிகளின் "நவீன, முறையான, மானுடவியல், சமூகவியல் அல்லது வரலாற்று ஆய்வுகள் எதுவும் இல்லை".[6] இடைக்காலக் காலத்தின் ஆதாரங்கள், 'கோலி' என்ற சொல் சட்டமற்ற மக்களுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றன. அதே சமயம் பிரித்தானிய காலனித்துவ ஆய்வுகள் பல்வேறு சமூகங்களுக்கான தெளிவற்ற கூட்டுப் பெயர்ச்சொல்லாகக் கருதுகின்றன. அவற்றின் ஒரே பொதுவான அம்சம் அவர்கள் குன்பிகளை விட தாழ்ந்தவர்கள் என்பதுதான். ஒரு கட்டத்தில், 'கோலி' ஒரு சாதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் பழங்குடி பில்களை விட உயர்ந்தது.[7]

குறைந்தபட்சம் 15 ஆம் நூற்றாண்டிலிருந்தே கோலி மக்களின் பதிவுகள் உள்ளன. இன்றைய குசராத்துத் பகுதியில் ஆட்சியாளர்கள் தங்கள் தலைவர்களை கொள்ளையர்கள் மற்றும் கடற்கொள்ளையர்கள் என்று அழைத்தனர்.[8]

வகைப்பாடு[தொகு]

இந்திய மாநிலங்களான குசராத்து,[9] கருநாடகம்,[10] மகாராட்டிரம் [11] மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தால் கோலி சமூகம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[12] ஆனால் மகாராட்டிராவில், டோக்ரே கோலி, மல்ஹர் கோலி மற்றும் மகாதேவ் கோலி ஆகியோர் மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தால் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினராக பட்டியலிடப்பட்டுள்ளனர்.[13] தில்லி,[14] மத்தியப் பிரதேசம் [15] மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இந்திய அரசு கோலி சமூகத்தை பட்டியலிடப்பட்ட சாதியாக வகைப்படுத்தியது.[16]

குற்றப் பரம்பரைச் சட்டம்[தொகு]

மகாராட்டிரம் மற்றும் குசராத்தின் கோலி சாதியினர் 1871 ஆம் ஆண்டின் சீர்மரபினர் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்]] கீழ் பிரித்தானிய இந்திய அரசு அல்லது பம்பாய் அரசாங்கத்தால் அவர்களின் சமூக விரோத செயல்களான கொள்ளை, கொலை, மிரட்டல் மற்றும் பயிர் மற்றும் விலங்கு திருட்டு போன்றவற்றின் கீழ் குற்றப் பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டனர்.[17] 1914 ஆம் ஆண்டில், மகாராட்டிராவின் கோலிகள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து, பிரித்தானிய அதிகாரிகளைத் தாக்கினர். கோலிகளைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் மீண்டும் கோலிகளை பம்பாய் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் குற்றப் பரம்பரையினராக அறிவித்தது. கோலிகள் அடிக்கடி மார்வாரி பனியாக்கள், சாகுகர்கள் மற்றும் பணம் கொடுப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். பணம் கொடுத்தவர்கள் கொடுத்த கடனை கோலிகளால் செலுத்த முடியவில்லை என்றால், அவர்கள் எப்போதும் வீட்டையும் கணக்குப் புத்தகங்களையும் எரித்துவிட்டு, கிடைக்கும் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்தனர். மகாராட்டிரா மற்றும் குஜராத்தின் கோலிகளுக்கு இது மிகவும் பொதுவானது, எனவே கோலிகள் பிரித்தானிய அதிகாரிகளுக்கு இழிவான பழங்குடியினராயினர். 1925 இல், கோலிகள் குற்றப் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டனர். இந்திய வரலாற்றாசிரியர் ஜிஎ;ஸ் குர்வேe, கோலிகள் பல படைப்பிரிவுகளில் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் இராணுவ வீரர்களாகப் பணிபுரிந்தார் என்று எழுதுகிறார்.

சான்றுகள்[தொகு]

 1. "Koli community hopeful of getting ST tag in Karnataka - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-04-08.
 2. "Odisha - List of Scheduled Tribes" (PDF). ST & SC Development, Minorities & Backward Classes Welfare Department Government of Odisha. Archived from the original (PDF) on 19 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 16 May 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 3. "Jammu and Kashmir BJP in favour of reservation for people living along international border". The New Indian Express. Archived from the original on 2019-04-08. பார்க்கப்பட்ட நாள் 2019-04-08.
 4. Shah 2004.
 5. Minhas, Poonam (1998). Traditional Trade & Trading Centres in Himachal Pradesh: With Trade-routes and Trading Communities (in ஆங்கிலம்). Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-080-4.
 6. Shah 2012.
 7. Ratnagar, Shereen. Being Tribal. Primus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-702-3.
 8. Shah, A. M.; Shroff, R. G. (1958). "The Vahīvancā Bāroṭs of Gujarat: A Caste of Genealogists and Mythographers". The Journal of American Folklore (American Folklore Society) 71 (281): 265. doi:10.2307/538561. https://www.jstor.org/stable/538561. 
 9. "A community called Koli - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
 10. "Who is stirring the caste cauldron in Karnataka?". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-03-01. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
 11. "CENTRAL LIST OF OBCs FOR THE STATE OF MAHARASHTRA" (PDF).
 12. "कोली को अनुसूचित जाति का दर्जा नहीं: हाईकोर्ट".
 13. "List Of Scheduled Tribes - TRTI, Pune". trti.maharashtra.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
 14. "N.C.T. Delhi : DATA HIGHLIGHTS: THE SCHEDULED CASTES : Census of India 2001" (PDF). Censusindia.gov. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
 15. "Madhya Pradesh : DATA HIGHLIGHTS: THE SCHEDULED CASTES : Census of India 2001" (PDF). Censusindia.gov. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
 16. "Rajasthan : DATA HIGHLIGHTS: THE SCHEDULED CASTES : Census of India 2001" (PDF). Censusindia.gov. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
 17. Vivekanand (2016). "Reversing the Semantics". Proceedings of the Indian History Congress 77: 276–281. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/26552652. 

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோலி மக்கள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலி_மக்கள்&oldid=3924917" இலிருந்து மீள்விக்கப்பட்டது