உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்னா சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
பாட்னா சமஸ்தானம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1360–1948
Location of
Location of
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் பாட்னா சமஸ்தானம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1360
 •  சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
Population
 •  1892 257,959 
தற்காலத்தில் அங்கம் பலாங்கீர் மாவட்டம், ஒடிசா, இந்தியா
Indian Princely States K-W

பாட்னா சமஸ்தானம் (Patna State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகராக பலாங்கீர் நகரம் விளங்கியது. இது தற்கால ஒடிசா மாநிலத்தின் பலாங்கீர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1892-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாட்னா சமஸ்தானம் 6,503 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 2,57,959 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.[1] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு

[தொகு]

ஒடிசா பகுதியில் கீழைக் கங்கர் ஆட்சி வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த போது, கிபி 1360-ஆம் ஆண்டில் இராஜபுத்திர குல சௌகான் வம்சத்தின் ராமாய் தேவன் பாட்னா சமஸ்தானத்தை நிறுவினார்.[2][3][4][5]சௌகான் வம்சத்தினர் சம்பல்பூர் சமஸ்தானம் மற்றும் சோன்பூர் சமஸ்தானங்களை நிறுவினர்.[6]இப்பகுதிகளை ஆண்ட சௌகான் வம்ச ஆட்சியைக் குறித்தான தகவல்கள் 16-ஆம் நூற்றாண்டு காலத்திய கோசலானந்த காவியம் மூலம் அறியப்படுகிறது. .[7]

1803-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது ஆங்கில-மராட்டிய போரின் முடிவில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றனர். இதனால் மராட்டியர் வசமிருந்த ஒடிசா உள்ளிட்டப் பகுதிகளும் ஆங்கிலேயரின் கீழ்வந்தது.1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பாட்னா சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் கிழக்கிந்திய முகமையின் கீழ் செயல்பட்டது. பாட்னா சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.

பாட்னா சமஸ்தானம் 1912-ஆம் ஆண்டு முதல் 1936வது ஆண்டு வரை பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்துடன் இணக்கப்பட்டது. பின்னர் 1936-ஆம் ஆண்டில் ஒரிசா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பாட்னா சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் ஒரிசா மாகாணத்தில் சேர்க்கப்பட்டது. மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, ஒரியா மொழி பேசும் பகுதிகளைக் கொண்டு 1 நவம்பர் 1956 அன்று ஒடிசா மாநிலம் நிறுவப்பட்டபோது பாட்னா சமஸ்தானப் பகுதிகள் பலாங்கீர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Patna (Princely State)". Archived from the original on 22 May 2009. பார்க்கப்பட்ட நாள் 22 May 2010.
  2. ODISHA DISTRICT GAZETTEERS BOLANGIR (PDF), GAD, Govt of Odisha, 1994, p. 55-65
  3. ODISHA DISTRICT GAZETTEERS DEOGARH (PDF), GAD, Govt of Odisha, 1994, p. 17-19
  4. "WESTERN ORISSA ON THE EVE OF CHAUHAN RULE" (PDF). www.shodhganga.inflibnet.ac.in. பார்க்கப்பட்ட நாள் 9 September 2017.
  5. "CHAUHAN RULERS OP PATNA STATE" (PDF). www.shodhganga.inflibnet.ac.in. பார்க்கப்பட்ட நாள் 9 September 2017.
  6. Brundaban Mishra (2012), Social Structure Of Western Orissa Under The Chauhans Of Sambalpur, JHSS, பார்க்கப்பட்ட நாள் 10 March 2021
  7. Ashok kumar Patnaik (December 2009), The Mirror Reflection of Sambalpur State through the Courtly Chronicle called Kosalananda Kavyam, Odisha History Congress, பார்க்கப்பட்ட நாள் 12 March 2021

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்னா_சமஸ்தானம்&oldid=3777591" இலிருந்து மீள்விக்கப்பட்டது