ஜாபூவா சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாபூவா சமஸ்தானம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1584–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of Jhabua
Location of Jhabua
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் ஜாபூவாவின் அமைவிடம்
தலைநகரம் ஜாபூவா
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1584
 •  1947 இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
Population
 •  1901 80,889 
தற்காலத்தில் அங்கம் ஜாபூவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா

ஜாபூவா சமஸ்தானம் (Jhabua State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள ஜாபூவா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் ஜாபூவ நகரம் ஆகும். 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜாபூவா இராச்சியம் 3460 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 80,889 மக்கள் தொகையும், ரூபாய் 1,10,000 ஆண்டு வருமானம் கொண்டிருந்தது.[1] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1956-ஆம் ஆண்டில் ஜாபூவா இராச்சியத்தை மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஜாபூவா இராச்சியப் பகுதிகளை மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[2]

வரலாறு[தொகு]

ஜாபூவா இராச்சியத்தை 1584-ஆம் ஆண்டில் கேசவ தாஸ் எனும் இராசபுத்திர குலத்தின் ரத்தோர் வம்ச மன்னரால், அக்பரின் ஆதரவுடன் நிறுவப்பட்டது. பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ஜாபூவா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ஜாபூவா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். ஜாபூவா இராச்சியம் மால்வா முகமையின் கீழ் பம்பாய் மாகாணத்தின் கீழிருந்தது. ஜாபூவா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1956-ஆம் ஆண்டில் ஜாபூவா இராச்சியத்தை மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஜாபூவா இராச்சியப் பகுதிகளை மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஜாபூவா இராச்சியம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஜாபூவா மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்[தொகு]

ஜாபூவா இரச்சியம் இராசபுத்திர குலத்தின் ரத்தோர் வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. இம்மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, பிரித்தானிய இந்திய அரசு 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தது.[3]

1584 – 1607 கேசவ தாஸ்
1607 – 1610 கர்ண் சிங்
1610 – 1677 மான் சிங்
1677 – 1723 குஷால் சிங்
1723 – 1727 அனூப் சிங்
1727 – 1758 சியோ சிங்
1758 – 1770 பகதூர் சிங்
1770 – 1821 பீம் சிங்
1821 – 1832 பிரதாப் சிங்
1832 – 1840 ரத்தன் சிங்
நவம்பர் 1841 – 1895 கோபால் சிங்
26 ஏப்ரல் 1895 – 1942 உதய் சிங்
1942 – 15 ஆகஸ்டு 1947  தலிப் சிங்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Imperial Gazetteer2 of India, Volume 8, page 147 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library".
  2. Jhabua - Princely State
  3. "Imperial Gazetteer2 of India, Volume 8, page 147 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாபூவா_சமஸ்தானம்&oldid=3376861" இலிருந்து மீள்விக்கப்பட்டது