வணக்கமுறை
வணக்கமுறை அல்லது வணக்கச்செயல் (Salute) என்பது வணக்கம் அல்லது மரியாதை தெரிவிக்கும் சைகையாகும். துவக்க காலத்தில் இராணுவத்தில் ஆயுத அசைப்பு அல்லது கொடியசைப்பு மூலம் வணக்க முறைகள் கடைபிடிக்கப்பட்டது. பின்னர் சமூகம் மற்றும் நிறுவனங்களிலும் இவ்வணக்க முறைகள் பல வழிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆயுத அசைப்பு அல்லது கொடியசைப்பு மூலம் தெரிவித்து வந்த வணக்க முறைகள், பின்னர் மாற்றப்பட்டு, கைகளை உயர்த்தி வணக்கம் தெரிவிக்கும் முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இராணுவத்தில் வணக்க முறைகள்
[தொகு]தரைப்படையினர் நிமிர்ந்து நின்று வலது கையை உயர்த்தி, உள்ளங்கை வெளிப்புறமாக காட்டி, வலதுபக்க நெற்றியில் வைத்து உயர் இராணுவ அதிகாரிகளுக்கு வணக்கம் செலுத்தும் முறை பொதுவாக உள்ளது. சில நாடுகளின் இராணுவத்தில் சில மாற்றங்களுடன் வணக்க முறை செலுத்துகிறது.
கடற்படை வீரர்கள் மட்டும், தங்களது வலது உள்ளங்கையை நெற்றிக்கிடையாக வைத்து உயர் அதிகாரிகளுக்கு வணக்கம் கூறும் முறையை கொண்டுள்ளனர்.
இராணுவத்தில் கால நேரத்திற்கு பல வகைகளில் வணக்கம் செலுத்தப்படுகிறது. கை சைகளாலும், துப்பாக்கி அல்லது பீரங்கிகளால் சுட்டும், கொடிகளை உயர்த்திப் பிடித்தும், தலையில் அணிந்துள்ள தொப்பிகளை கழற்றி தலை குனிவதன் மூலமும் மற்றும் பிற வகைகளிலும் வணக்கம் அல்லது மரியாதை செலுத்தப்படுகிறது.
சாரணர் இயக்கத்தில்
[தொகு]சாரணர் இயக்கத்தில் வலது கையை உயர்த்தி உள்ளங்கையை நெற்றியில் வெளிப்புறமாக வைத்து, இடது கையால், உயர் அதிகாரியின் இடது கையை குலுக்குவதன் மூலம் வணக்கச் செயலை வெளிப்படுத்துகின்றனர்.
தோற்றம்
[தொகு]மேற்கத்திய இராணுவக் குறிப்புகளின் படி, மேற்கத்திய நாட்டுப் போர் வீரர்கள் (knights) ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறும் போது, தங்களது தலைக்கவசங்களை கழற்றி வணக்கம் தெரிவித்தனர். [1] 1745-ஆம் ஆண்டின் பிரித்தானியாவின் இராணுவக் கட்டளை நூலில் போர் வீரர்கள் மற்றும் பிற அதிகாரிகள் தங்களது தொப்பிகளை கழற்றி, குனிந்து தங்களது உயர் இராணுவ அதிகாரிகளுக்கு வணக்கம் செலுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "See external picture". 123rf.com. 2012-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-28.
- ↑ "Origin of the Hand Salute" பரணிடப்பட்டது 2015-12-26 at the வந்தவழி இயந்திரம், US Army Quartermaster Center & School, retrieved 27 September 2014
- Leonard Wong, Douglas C. Lovelace, Jr.: Knowing when to Salute, Strategic Studies Institute of the US Army War College, July 2007