பாலன்பூர் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலன்பூர் இராச்சியம்
પાલનપુર રિયાસત
पालनपुर रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1370–1948 [[Dominion of India|]]
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பாலன்பூர்
1922-ஆம் ஆண்டில் பாலன்பூர் இராச்சியத்தின் வரைபடம்
தலைநகரம் பாலன்பூர்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1370
 •  இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1940 4,574 km2 (1,766 sq mi)
Population
 •  1940 பனஸ்கந்தா மாவட்டம்
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character "[". /km2  (Expression error: Unrecognized punctuation character "[". /sq mi)
தற்காலத்தில் அங்கம் பாலன்பூர், பனஸ்கந்தா மாவட்டம், குஜராத், இந்தியா
பாலன்பூர் இராச்சியத்தின் நீதிமன்ற முத்திரை கட்டண வில்லை
பாலன்பூர் ஆட்சியாளர்களின் குடும்ப மரம்

பாலன்பூர் சமஸ்தானம் (Palanpur State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன தலைநகரம் பாலன்பூர் நகரம் ஆகும். 1940-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாலன்பூர் இராச்சியம் 4,574 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3,15,855 மக்கள் தொகையும், ஆண்டு வருமானம் £ 50,000 கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு[தொகு]

பாரம்பரிய வரலாற்றின் படி பாலன்பூர் இராச்சியம் பஷ்தூன் இனத்தின் ஜாலோரி வம்ச இசுலாமிய நவாப்புகளால் 1370-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]

18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் முகலாயப் பேரரசு வீழ்ச்சி அடையத் துவங்கிய போது, பாலன்பூர் இராச்சியம், மராத்தியப் பேரரசின் கீழ் ஒரு சிற்றரசாக விளங்கியது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பாலன்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் பரோடா மற்றும் குஜராத் முகமையின் கீழ் செயல்பட்டது. பாலன்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பாலன்பூர் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, பாலன்பூர் இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Princely States - Palanpur". 15 January 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 April 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 24°10′N 72°26′E / 24.17°N 72.43°E / 24.17; 72.43

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலன்பூர்_சமஸ்தானம்&oldid=3374473" இருந்து மீள்விக்கப்பட்டது