பாலன்பூர்
பாலன்பூர்
પાલનપુર | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | பனஸ்கந்தா |
ஏற்றம் | 209 m (686 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,40,344 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 385 001 |
தொலைபேசி குறியீடு எண் | 91-2742 |
வாகனப் பதிவு | GJ-8 |
பாலன்பூர் (Palanpur), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின், பனஸ்கந்தா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும். இந்தியாவின் வைரநகரம் மற்றும் பூக்கள் நகரம் என்ற பெருமைக்குரியது. பனஸ்கந்தா கூட்டுறவு பால் பண்ண நாள் ஒன்றுக்கு 35 இலட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது. இது பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது பாலன்பூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பாலன்பூர் நகர மக்கள் தொகை 1,40,344 ஆகும். அதில் ஆண்கள் 53%; பெண்கள் 47% ஆக உள்ளனர்.[1] எழுத்தறிவு விகிதம் 86% ஆகும். ஆறு வயதிற்குட்பட்டவர், மக்கட்தொகையில் 13%ஆக உள்ளனர்.
வணிகம்
[தொகு]பால் பண்ணை, வைரங்களுக்குப் பட்டைத் தீட்டுதல் & மெருகு ஏற்றுதல், சலவைக்கல் பட்டைத் தீட்டுதல் தொழில்கள் அதிகம் உள்ள நகரம்.
போக்குவரத்து வசதிகள்
[தொகு]பாலன்பூர் நகரை இருப்புப் பாதைகள், சாலைகள் ஆகியவற்றின் மூலமும் வான் வழியாகவும், மாநிலத்தின் பிற பகுதிகளையும் நாட்டின் ஏனைய பகுதிகளையும் சென்றடையலாம்.
அருகில் உள்ள இடங்கள்
[தொகு]- ராணியின் குளம், பதான்
- சூரியன் கோயில்
- ஜெஸ்சூர் கரடி காப்பகம் (Jessore Sloth Bear Sanctuary)
- தந்திவடா அணை
- அம்பாஜி கோயில்
- பலராம் அரண்மனை
அருகில் உள்ள நகரங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999%7Carchiveurl=http://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999%7Carchivedate=2004-06-16%7Ctitle=[தொடர்பிழந்த இணைப்பு] Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|publisher= Census Commission of India}}
வெளி இணைப்புகள்
[தொகு]- palanpur city website பரணிடப்பட்டது 2015-07-15 at the வந்தவழி இயந்திரம்