இராஜ்கோட் இராச்சியம்
Appearance
இராஜ்கோட் இராச்சியம் રાજકોટ રજવાડું[1] | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
சௌராட்டிரா தீபகற்பத்தில் இராஜ்கோட் இராச்சியத்தின் அமைவிடம் | ||||||
தலைநகரம் | ராஜ்கோட் | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1620 | ||||
• | இந்திய விடுதலை, சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1931 | 730 km2 (282 sq mi) | ||||
Population | ||||||
• | 1931 | 75,540 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) |
ராஜ்கோட் இராச்சியம் (Rajkot State) பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த சுதேச சமஸ்தானம் ஆகும்.[2] இதன் தலைநகர் ராஜ்கோட் ஆகும். இந்த இராச்சியம் சௌராட்டிரா தீபகற்பத்தில் அஜி ஆற்றின் கரையில் இருந்தது. 1931-ஆம் ஆண்டில் இராஜ்கோட் இராச்சியத்தின் பரப்பளவு 730 சதுர கிலோ மீட்டர் மற்றும் மக்கள் தொகை 75,540 ஆகும்.
வரலாறு
[தொகு]ராஜ்கோட் இராச்சியத்தை 1620-ஆம் ஆண்டில் நிறுவியவர் இராஜபுத்திர குலத்தின் ஜடேஜா வம்சத்தை சேர்ந்த விபோஜி அஜோஜி ஜடேஜா ஆவார். இவர் நவநகர் இராச்சிய மன்னர் ஜாம் சத்திரசால் சாதாஜி விபாஜி ஜடேஜாவின் பேரன் ஆவார்.
ஆட்சியாளர்கள்
[தொகு]இராஜ்கோட் இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் தாக்கூர் சாகிப் எனும் பட்டத்தை இட்டுக்கொள்வார்கள்:[3]
தாக்கூர் சாகிப்புகள்
[தொகு]- 1694 – 1720 இரண்டாம் பாமனியாஜி (இறப்பு. 1720)
- 1720 – 1732 மசூம் கான் சுக்கட் (முகலாய ஆளுநர்) (இ. 1732)
- 1732 – 1746 முதலாம் ரன்மால்ஜி (இ. 1746)
- 1746 – 17.. லக்காஜி முதலாம் ரன்மால்ஜி (முதல் முறை) (இ. 1796)
- 17.. – 1794 மெக்ரமாம்ஜி மூன்றாம் லக்காஜி (இ. 1794)
- 1794 – 1795 லக்காஜி முதலாம் ரன்மால்ஜி (இரண்டாம் முறாஇ)
- 1795 – 1825 ரன்மால்ஜி இரண்டாம் மெக்ரமாம்ஜி (இ. 1825)
- 1825 – 1844 சூரஜ் ஜி ரன்மால் ஜி (இ. 1844)
- 1844 – 8 நவம்பர் 1862 மெக்ரமாம் ஜி நான்காம் சூரஜ் ஜி (இ. 1862)
- 8 நவம்பர் 1862 – 16 ஏப்ரல் 1890 பவாஜிராஜ் மெகர்மான்சிங் (பிறப்பு:. 1856 – இறப்பு. 1890)
- 1862 – 1867 தாக்குரானிஜி பாய் நானிபா (இ: 1893) குன்வெர்பா (தந்தை) - அரசப்பிரதிநிதி
- 1867 – 17 சனவரி 1876 ஜெ. எச். லாயிட் - பிரித்தானிய அரசப்பிரதிநிதி
- 16 ஏப்ரல் 1890 – 2 பிப்ரவரி 1930 லக்காஜி மூன்றாம் ப்வாஜிராஜ் (பி. 1885 – இ. 1930 ) (3 சூன் 1918 முதல் சர் லக்காஜி மூன்றாம் பாவாஜிராஜ்)
- 16 ஏப்ரல் 1890 – 21 அக்டோபர் 1907 .... - அரசப்பிரதிநிதி
- 2 பிப்ரவரி 1930 – 11 சூன் 1940 தர்மேந்திர சிங் லக்காஜி (பி. 1910 – இ. 1940)
- 11 சூன் 1940 – 15 ஆகஸ்டு 1947 பிரத்தியும்மன் சிங் (பி. 1913 – இ. 1973)
இதனையும் காண்க
[தொகு]- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BhagwatGoMandal
- ↑ "Rajkot Princely State (9 gun salute)". Archived from the original on 2018-10-19. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
- ↑ "Indian states before 1947 K-W". rulers.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-14.