துங்கர்பூர் சமஸ்தானம்
துங்கர்பூர் சமஸ்தானம் डूंगरपुर रियासत | |||||
சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் துங்கர்பூர் சமஸ்தானத்தின் அமைவிடம் | |||||
தலைநகரம் | துங்கர்பூர் | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1197 | |||
• | இந்திய விடுதலை | 1947 | |||
பரப்பு | |||||
• | 1901 | 3,781 km2 km2 (Expression error: Unrecognized word "km". sq mi) | |||
Population | |||||
• | 1901 | 100,103 | |||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | இராஜஸ்தான், இந்தியா | ||||
Dungarpur (Princely State) |
துங்கர்பூர் சமஸ்தானம் (Dungarpur State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இச்சமஸ்தானம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கில் அமைந்த பழைய துங்கர்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் துங்கர்பூர் ஆகும்.1901-இல் இதன் மக்கள் தொகை 100,103 ஆக இருந்தது.
வரலாறு
[தொகு]துங்கர்பூர் பகுதியை கிபி 12-ஆம் நூற்றாண்டில் இராஜபுத்திரர்களால் வெல்லப்படும் வரை, பில் பழங்குடி மக்களால் நிறைந்திருக்கப் பெற்றிருந்தது.[1] மேவார் இராஜபுத்திர மன்னர் சமந்து சிங் என்பவர் துங்கர்பூர் அரசை 1197-இல் நிறுவினார்.[2][3] பில் மக்கள் இப்பகுதியில் பெரும்பாண்மை மக்களாகவே உள்ளனர்.[4]
1895-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் துங்கர்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [5][6][7] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று துங்கர்பூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[8]
இவற்றையும் பார்க்க
[தொகு]- துங்கர்பூர் மாவட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- திவான்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vaughan, Keith (2009). "Faces of India". PSA Journal 75 (10): 26–29, page 27.
- ↑ Sharma, Dasharatha, ed. (1966). Rajasthan Through the Ages. Bikaner: Rajasthan State Archives.
- ↑ "Dungarpur (Princely State)". Queensland University. Archived from the original on 5 September 2011.
- ↑ Fattori 2012, ப. 141–143
- ↑ [WorldStatesmen - India Princely States K-Z
- ↑ http://www.thefreedictionary.com/Princely+state
- ↑ http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
- ↑ Princely States of India