சுகேத் சமஸ்தானம்
சுகேத் இராச்சியம் सुकेत राज्य | ||||||
Type of subdivision of (the) Former Country | ||||||
| ||||||
| ||||||
வரலாற்றுக் காலம் | பிரித்தானிய இந்தியா | |||||
• | நிறுவப்பட்டது | 765 | ||||
• | 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | ஏப்ரல் 15, 1948 | ||||
Population | ||||||
• | 1931 | 58,408 | ||||
தற்காலத்தில் அங்கம் | மண்டி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
சுகேத் சமஸ்தானம் (Suket State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும்.[1] இது தற்கால இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சுகேத் இராச்சியம் 1088 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 58,408 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .
வரலாறு
[தொகு]கிபி 765-ஆம் ஆண்டில் வங்காளத்தின் சென் வம்ச மன்னர் வீர் சென் என்பவரால் சுகேத் இராச்சியம் நிறுவப்பட்டது.[2]முகலாயப் பேரரசில் சுகேத் இராச்சியம் சிற்றரசாக இருந்தது. சீக்கியப் பேரரசுடன் நல்லுறவு கொண்டிருந்த சுகேத் இராச்சிய மன்னர் இரண்டாம் விக்ரம் சென் ஆட்சியின் போது, நேபாள இராச்சியத்தினரின் (1803 to 1815) தாக்குதல்களை எதிர் கொண்டு நின்றது. ஆனால் இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போரின் (1848 - 1849), பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக சுகேத் சமஸ்தானம், மண்டி சமஸ்தானம் மற்றும் பிலாஸ்பூர் சமஸ்தானங்கள் இருந்தது.[3]
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சுகேத் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்ரேவா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். இது பஞ்சாப் அரசுகள் முகமையில் இருந்தது.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சுகேத் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சுகேத் இராச்சியம் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]- மண்டி மாவட்டம்
- பஞ்சாப் அரசுகள் முகமை
- பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Punjab". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911). Cambridge University Press.
- ↑ Princely states of India
- ↑ Mark Brentnall, ed. The Princely and Noble Families of the Former Indian Empire: Himachal Pradesh. p. 94