ஜெய்சல்மேர் சமஸ்தானம்
ஜெய்சல்மேர் சமஸ்தானம்
Jaisalmer State | ||||||
முடியாட்சி 1156–1818 சுதேச சமஸ்தானம் 1818–1947 அரசியல்சட்ட முடியாட்சி 1947-149 (பாட்டி வம்சம்) | ||||||
| ||||||
| ||||||
Map of Jaisalmer State with the duchies of Satto, Pithala, Loharki, Lakhmana, Didhu, Kanod, Tota, Bhadariya, and Nachna | ||||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1156 | ||||
• | இந்திய விடுதலை | 1947 | ||||
பரப்பு | ||||||
• | 1931 | 41,600 km2 (16,062 sq mi) | ||||
Population | ||||||
• | 1931 | 76,255 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | இராஜஸ்தான், இந்தியா | |||||
Coat of arms based on The Princely Armory. Publ. by The Office of the Superintendent of Government Printing. Calcutta. 1877 |
ஜெய்சல்மேர் சமஸ்தானம் (Jaisalmer State) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தூர-மேற்கில் தார் பாலைவனத்தில் அமைந்திருந்த ஜெய்சல்மேர் இராச்சியத்தை பாட்டி வம்ச இராசபுத்திரர்கள் 12-ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து 1947 முடிய ஆண்டனர். ஜெய்சல்சல்மேர் இராச்சியத்தின் தலைநகராக ஜெய்சல்மேர் நகரம் இருந்தது. பழைய ஜெய்சல்மேர் மாவட்டத்தின் நிலப்பரப்புகளை இந்த இராச்சியம் கொண்டிருந்தது. 41600சதுர மைல் பரப்பளவு கொண்டிருந்த இந்த சமஸ்தானத்தின் 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 76,255 ஆகும்.
வரலாறு
[தொகு]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1798 முதல் 1805 முடிய செயல்படுத்திய இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் ஜெய்சல்மேர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [1][2][3] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[4]
இவற்றையும் பார்க்க
[தொகு]- ஜெய்சல்மேர் மாவட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- திவான்