ஜஞ்சிரா இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜஞ்சிரா இராச்சியம்
जंजिरा रियासत
பிரித்தானிய இந்தியாவின் சுதேச சமஸ்தானம் (1759 - 1948)
1489–1948

Flag of ஜஞ்சிரா

கொடி

Location of ஜஞ்சிரா
Location of ஜஞ்சிரா
Janjira 1896
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1489
 •  இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1931 839 km2 (324 sq mi)
Population
 •  1931 110,389 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் ராய்கட் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
ஜாஞ்சிரா இராச்சியக் கப்பல் கொடி
ஜாஞ்சிரா கோட்டை
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் ஜாஞ்சிரா இராச்சியம்

ஜாஞ்சிரா இராச்சியம் (Janjira State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் முருத்-ஜாஞ்சிரா கோட்டை ஆகும். இது தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் முருத் தாலுகா, ரோகா தாலுகா மற்றும் ஸ்ரீவர்தன் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜாஞ்சிரா இராச்சியம் 839 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,10,389 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த சித்தியர்கள் இசுலாமிய அடிமை வீரர்கள் ஆவார். ஜாஞ்சிரா இராச்சியத்தின் கீழ் தற்கால குஜராத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் ஜாப்ராபாத் இராச்சியம் இருந்தது.

வரலாறு[தொகு]

மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ஜாஞ்சிரா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ஜாஞ்சிரா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. ஜாஞ்சிரா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி ஜாஞ்சிரா இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஜாஞ்சிர இராச்சியம் மகாராட்டிரா மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த ஜாஞ்சிரா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.[1]

ஜாஞ்சிராவின்வசீர்கள்[தொகு]

 • சித்திக் பதே கான்
 • 1676 - 1703 இரண்டாம் காசீம் யாகூத் கான்
 • 1703 - 1707 அமாபாத் யாகூத் கான் II
 • 1707 - 1732 சுரூர் யாகூத் கான் II
 • 1732 - 1734 ஹசன் கான் (முதல் முறை)
 • 1734 - 1737 சும்புல் கான்
 • 1737 - 1740 அப்துல் ரகுமான் கான்
 • 1740 - 1745 ஹசன் கான் (இரண்டாம் முறை)
 • 1745 - 1757 இப்ராகிம் கான் I
 • 1757 முகமது கான் I
 • 1757 - 1759 இப்ராகிம் கான் I (இரண்டாம் முறை)

ஜாப்ராபாத்தின் தானேதார்கள் மற்றும் ஜாஞ்சிராவின் வசீர்கள்[தொகு]

 • 1759 - 1761 இப்ராகிம் கான் I
 • 1761 - 1772 யாகூத் கான்
 • 1772 - 1784 அப்துல் அல் ரகீம் கான்
 • 1784 - 1789 ஜௌஹர் கான்
  • - in dispute with -
   • 1784 - 1789 அப்துல் கரீம் யாகூத் கான்
 • 1789 - 1794 இப்ராகிம் கான் II
 • 1794 - 1803 ஜும்ரூத் கான்

நவாப்புகள்[தொகு]

 • 1803 - 1826 இப்ராகிம் கான் II
 • 1826 - 31 ஆகஸ்டு 1848 முகமது கான் I
 • 31 ஆகஸ்டு 1848 – 28 சனவரி 1879 இப்ராகிம் கான் III
 • 28 சனவரி 1879 - 2 மே 1922 அகமது கான்
 • 28 சூன் 1879 – 11 அக்டோபர் 1883 .... -அரசப்பிரதிநிதி
 • 2 மே 1922 – 15 ஆகஸ்டு 1947 முகமது கான் II (பிறப்பு:. 1914 - இறப்பு. 1972)
 • 2 மே 1922 - 9 நவம்பர் 1933 குல்சும் பேகம் - அரசப்பிரதிநிதி (பி. 1897 - இ. 1959)[2]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 1. "Janjira Princely State (11 gun salute)". Archived from the original on 2018-07-21. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.
 2. Princely States of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஞ்சிரா_இராச்சியம்&oldid=3779043" இலிருந்து மீள்விக்கப்பட்டது