ஸ்ரீவர்தன் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீவர்தன் தாலுகா, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும். [1]இதன் நிர்வாகத் தலைமையிடம் ஸ்ரீவர்தன் நகரம் ஆகும். இத்தாலுகா 1 நகராட்சியும், 1 கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் 78 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஸ்ரீவர்தன் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 83,027 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 38,517 மற்றும் பெண்கள் 44,510 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,156 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 9017 - 11% ஆகும். சராசரி எழுத்தறிவு 82.32% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 2,467 மற்றும் 9,476 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 73.24%, இசுலாமியர்கள் 22.8%, பௌத்தர்கள் 3.3%, சமணர்கள் 0.36%, கிறித்துவர்கள் 0.09% மற்றும் பிறர் 0.21% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீவர்தன்_தாலுகா&oldid=3357738" இலிருந்து மீள்விக்கப்பட்டது