கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவல்பூர்
|
சுதேச சமஸ்தானம் பாகித்தான்
|
|

கொடி
|
Location of பகவல்பூர் இராச்சியம்பாகிஸ்தான் வரைபடத்தில் பகவல்பூர் இராச்சியத்தின் அமைவிடம்
|
தலைநகரம்
|
பகவல்பூர்
|
வரலாறு
|
|
• |
நிறுவப்பட்டது
|
1609
|
• |
Disestablished
|
14 அக்டோபர் 1955
|
பரப்பு
|
45,911 km2 (17,726 sq mi)
|
பகவல்பூர் நவாப் முகமது கான் V (1883–1907).
புகழ்பெற்ற நவாப் சாதிக் முகமது கான் V
பகவல்பூர் இராச்சியம் (Bahawalpur state (உருது: بہاولپُور) இந்தியப் பிரிவினைக்கு முன்னர் வரை பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் பகவல்பூர் மாவட்டம் மற்றும் ரகீம் யார் கான் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் பகவல்பூர் நகரம் ஆகும். 1941-ஆம் ஆண்டில் பகவல்பூர் இராச்சியம் 45,911 சதுர கிலோ மீட்டர் (17,494 sq மைல்) பரப்பளவும், மக்கள் தொகை 13,41,209 ஆகவும் இருந்தது. பகவல்பூர் இராச்சியத்தை 1609-ஆம் ஆண்டில் நிறுவியவர் நவாப் பகவல் கான் அப்பாசி ஆவார்.
முகலாயப் பேரரசு மற்றும் துராணிப் பேரரசில் சிற்றரசாக இருந்த பகவல்பூர் இராச்சியம், 1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 22 பிப்ரவரி 1858 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பகவல்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். பகவல்பூர் இராச்சியம் பஞ்சாப் மாகாண ஆளுநரின் கீழ் செயல்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், பகவல்பூர் நவாப்புக்கு 19 துப்பாக்கி குண்டுகள் சுட்டு மரியாதை வழங்கினர்.[1]
1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், 14 அக்டோபர் 1955 அன்று பகவல்பூர் இராச்சியம், பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
ஆடசியாளர்கள்[தொகு]
பகவல்பூர் இராச்சிய அரண்மனை
ஆட்சிக் காலம் |
நவாப்
|
1723 - 11 ஏப்ரல் 1746 |
சாதிக் I
|
11 ஏப்ரல் 1746 – 12 சூன் 1750 |
பகவல் I
|
12 சூன் 1750 – 4 சூன் 1772 |
முபாரக் II
|
4 சூன் 1772 – 13 ஆகஸ்டு 1809 |
பகவல் II
|
13 ஆகஸ்டு 1809 – 17 ஏப்ரல் 1826 |
சாதிக் II
|
17 ஏப்ரல் 1826 – 19 அக்டோபர் 1852 |
பகவல் III
|
19 அக்டோபர் 1852 – 20 பிப்ரவரி 1853 |
சாதிக் III
|
20 பிப்ரவரி 1853 – 3 அக்டோபர் 1858 |
பாத் முகமது கான்
|
3 அக்டோபர் 1858 – 25 மார்ச் 1866 |
பகவல் IV
|
25 மார்ச் 1866 – 14 பிப்ரவரி 1899 |
சாதிக் முகமது கான் IV
|
14 பிப்ரவரி 1899 – 15 பிப்ரவரி 1907 |
முகமது பகவல் கான் V
|
15 பிப்ரவரி 1907 – 14 அக்டோபர் 1955 |
சாதிக் முகமது கான் V
|
14 அக்டோபர் 1955 |
பகவல்பூர் இராச்சியம் கலைக்கப்பட்டது.
|
பதவிக் காலம் |
பிரதம அமைச்சர்
|
1942 – 1947 |
ரிச்சர்டு மார்ஷ் குரோப்டன்
|
1948 – 1952 |
ஜான் டிரிங்க்
|
1952 – 14 அக்டோபர் 1955 |
ஏ. ஆர். கான்
|
14 அக்டோபர் 1955 |
பகவல்பூர் இராச்சியம் கலைகக்ப்பட்டது.
|
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
மேலும் படிக்க[தொகு]
- Nazeer 'Ali Shah, The History of the Bahawalpur State. Lahore: Maktaba Jadeed, 1959.
வெளி இணைப்புகள்[தொகு]