சைலானா சமஸ்தானம்
Warning: Value not specified for "common_name" | ||||||
சைலானா சமஸ்தானம் | ||||||
சுதேச சமஸ்தானம் | ||||||
| ||||||
| ||||||
![]() | ||||||
தலைநகரம் | சைலானா | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1736 | ||||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
Population | ||||||
• | 1881 | 59,723 | ||||
தற்காலத்தில் அங்கம் | ரத்லாம் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா | |||||
(Princely State) |

சைலானா சமஸ்தானம் (Sailana State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சைலானா நகரம் ஆகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மால்வா பகுதியில் உள்ள ரத்லம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1881-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சைலானா சமஸ்தானம் 1165 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 59,723 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. பிரித்தானிய இந்தியாவின் மால்வா முகமையில் இருந்த இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .
வரலாறு
[தொகு]இராஜபுத்திர குலத்தின் ரத்தோர் வம்சத்தின் ஜெய் சிங் என்பவர், ரத்லம் இராச்சியத்தின் சைலானாப் பகுதிகளைக் கொண்டு, 1736-ஆம் ஆண்டில் சைலானா சமஸ்தானத்தை நிறுவினார். பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த சைலானா சமஸ்தானம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் மால்வா முகமையின் கீழ் செயல்பட்டது. சைலானா சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சைலானா சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட மத்திய பாரத மாநிலத்தில் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சைலானா சமஸ்தானப் பகுதிகள் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ரத்லம் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]- மத்திய பாரதம் - (1948–1956)
- விந்தியப் பிரதேசம் - (1948–1956)
- பம்பாய் மாகாணம்
- மால்வா முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா