சோன்பூர் சமஸ்தானம்
சோன்பூர் சமஸ்தானம் | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
சின்னம் | |||||
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் சோன்பூர் சமஸ்தானம் | |||||
தலைநகரம் | சுபர்ணாபூர் | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1650 | |||
• | இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | |||
Population | |||||
• | 1901 | 1,69,877 |
சோன்பூர் சமஸ்தானம் (Sonepur State),[1]1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால ஒடிசா மாநிலத்தின் சுபர்ணாபூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோன்பூர் சமஸ்தானம் 2,347 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,69,877 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
வரலாறு
[தொகு]ஒடிசா பகுதியில் கீழைக் கங்கர் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர், கிபி 1650-ஆம் ஆண்டில் சம்பல்பூர் இராச்சிய மன்னர் மதுகர் தேவ் சோன்பூர் இராச்சியப் பகுதிகளை கைப்பற்றி, தனது மகன் மதன் கோபாலை சோன்பூர் சமஸ்தானத்தின் மன்னராக்கினார்.[2] 1800-ஆம் ஆண்டில் சோன்பூர் சமஸ்தானம் மராத்தியப் பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்தது. 1803-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது ஆங்கில-மராட்டிய போரின் முடிவில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் வெற்றிபெற்றனர். இதனால் மராட்டியர் வசமிருந்த சோன்பூர் சமஸ்தானம் உள்ளிட்ட ஒடிசா பகுதிகளும் ஆங்கிலேயரின் கீழ்வந்தது.
1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சோன்பூர் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் கிழக்கிந்திய முகமையின் கீழ் செயல்பட்டது. சோன்பூர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.[3][4]முதலில்
சோன்பூர் சமஸ்தானம் முதலில் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1912-ஆம் ஆண்டு முதல் 1936வது ஆண்டு வரை பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்துடன் இணக்கப்பட்டது. பின்னர் 1936-ஆம் ஆண்டில் புதிய [[ஒரிசா மாகாணம்|ஒரிசா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சோன்பூர் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் ஒரிசா மாகாணத்தில் சேர்க்கப்பட்டது. மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஒரியா மொழி பேசும் பகுதிகளைக் கொண்டு 1 நவம்பர் 1956 அன்று ஒடிசா மாநிலம் நிறுவப்பட்ட போது சோன்பூர் சமஸ்தானப் பகுதிகள் சுபர்ணாபூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]- மராட்டியப் பேரரசு
- இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1803–1805)
- பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (1912–1936)
- ஒரிசா மாகாணம் (1936–1947)
- கிழக்கிந்திய முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sonpur". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 25. (1911). Cambridge University Press.
- ↑ Princely States of India
- ↑ ODISHA DISTRICT GAZETTEERS SUBARNAPUR (PDF), GAD, Govt of Odisha, 2016, pp. 22–29
- ↑ Raghumani Naik (3 March 2018), GENEALOGICAL ANALYSIS OF CHAUHAN RULERS OF PATNAGARH IN WESTERN ORISSA: A STUDY, IRJHRSS, பார்க்கப்பட்ட நாள் 12 March 2021
வெளி இணைப்புகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]- மராட்டியப் பேரரசு
- இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1803–1805)
- பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (1912–1936)
- ஒரிசா மாகாணம் (1936–1947)
- கிழக்கிந்திய முகமை
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா