கோல்ஹாப்பூர் அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோல்ஹாப்பூர் இராச்சியம்
கோல்ஹாப்பூர் அரசு
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1710–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of கோலாப்பூர்
1896ல் கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் வரைபடம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1710
 •  கலைக்கப்பட்டது 1948
பரப்பு
 •  1901 8,332 km2 (3,217 sq mi)
Population
 •  1901 9,10,011 
மக்கள்தொகை அடர்த்தி 109.2 /km2  (282.9 /sq mi)
தற்காலத்தில் அங்கம் மகாராட்டிரா, இந்தியா
Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

கோல்ஹாப்பூர் இராச்சியம் அல்லது கோல்ஹாப்பூர் மராத்திய நாடு (Kolhapur State or Kolhapur Maratha Kingdom) (1710–1948) சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல்களான போன்சலே வம்சத்தினர் 1710 முதல் 1948 முடிய ஆண்ட நாடாகும். இந்நாட்டின் தலைநகரம் கோலாப்பூர் நகரம் ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

கோல்ஹாப்பூர் மன்னர் சாகு மகராஜ், ஆட்சிக்காலம் 1894 - 1922
கோல்ஹாப்பூரின் புதிய அரண்மனை, கோலாப்பூர்
கோல்ஹாப்பூர் மகாராணி தாராபாய்

1901ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 8,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோலாப்பூர் இராச்சியத்தின் மொத்த மக்கள தொகை 9,10,011 ஆகும். மொத்த மக்கள் தொகையில், கோலாப்பூர் நகரத்தில் மட்டும் 54,373 மக்கள் வாழ்ந்தனர். இந்த இராச்சியத்தின் ஆண்டு மொத்த வருவாய் 300,000 பிரித்தானிய பவுண்டு ஆகும். [1]

வரலாறு[தொகு]

கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் மராத்திய போன்சலே வம்சத்தவர்கள் சதாரா அரசு மற்றும் தஞ்சாவூர் மராத்திய அரசுகளை ஆண்டனர்.

சத்ரபதி சிவாஜியின் ஒன்பது வயது பேரனும் சத்திரபதி சம்பாஜியின் ஒன்பது வயது மகனுமான சாகுஜி தில்லி முகலாயர்களின் சிறையில் இருந்தார். மராத்தியப் பேரரசர் சத்திரபதி இராஜாராம் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் பேரரசிற்கான வாரிசுரிமைப் போட்டி ஏற்பட்டது. சத்திரபதி இராஜராமின் குழந்தை இரண்டாம் சிவாஜியை மராத்தியப் பேரரசராக அறிவித்து, இராஜாராமின் மனைவி தாராபாய் மறைமுகமாக அரசை ஆண்டார்.

1707ல் தில்லி சிறையிலிருந்து விடுதலையான சாகுஜி, மராத்தியப் பேரரசை ஆளும் உரிமை கோரி சதாராவைக் கைப்பற்றி, இராணி தாராபாயையும், குழந்தை இரண்டாம் சிவாஜியையும் கோலாப்பூருக்கு வெளியேற்றினார். இந்நிலையில் ராணி தாராபாயின் சக்களத்தியான (இராஜாராமின் இரண்டாம் மனைவி) இராஜேஸ்பாய், தன் மகன் இரண்டாம் சம்பாஜியை கோல்ஹாப்பூரின் மன்னராக்கினார்.

1818ல் மராத்திய கூட்டமைப்பு கலைந்த பின்னர், கோல்ஹாப்பூர் அரசு, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன் படி கோல்ஹாப்பூர் அரச நிர்வாகத்திற்கு ஆலோசனை கூற, பிரித்தானிய இராஜதந்திரி ஒருவரை கோல்ஹாப்பூர் அரசவையில் நியமித்தனர். [2] மேலும் கோல்ஹாப்பூர் இராச்சியம் பிரித்தானியருக்கு அடங்கி நடக்கும் சுதேச சமஸ்தானமாக இந்தியா விடுதலை ஆகும் வரை செயல்பட்டது. [3]

இந்திய விடுதலைக்குப் பின் கோல்ஹாப்பூர் இராச்சியம் 1948ல் இந்தியாவின் மும்பை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

கோலாப்பூர் இராச்சிய மன்னர்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kolhapur Princely State (19 gun salute)". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.
  2. Manohar Malgonkar, Chhatrapatis of Kolhapur, Pub. Popular Prakashan, 1971.
  3. Princely States of India

வெளி இணைப்புகள்[தொகு]


ஆள்கூறுகள்: 16°41′N 74°14′E / 16.683°N 74.233°E / 16.683; 74.233

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்ஹாப்பூர்_அரசு&oldid=3242403" இருந்து மீள்விக்கப்பட்டது