போர்பந்தர் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்பந்தர் இராச்சியம்
1193–1948
கொடி of
கொடி
சின்னம் of
சின்னம்
கத்தியவார் முகமையில் போர்பந்தர் இராச்சியம்
கத்தியவார் முகமையில் போர்பந்தர் இராச்சியம்
நிலைதன்னாட்சியுடன் கூடிய முடியாட்சி (1193-1808)
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்(1808-1858) மற்றும் பிரித்தானிய இந்தியா (1858-1948)
தலைநகரம்போர்பந்தர் (1193-1307, 1785-1948)
ரண்பூர் (1307-1574)
சாயா (1547-1785)
பேசப்படும் மொழிகள்குஜராத்தி
அரசாங்கம்தன்னாட்சியுடன் கூடிய முடியாட்சி (1193-1808)
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்(1808-1858) மற்றும் பிரித்தானிய இந்தியா (1858-1948)
மகாராஜா ராணா 
• 10 டிசம்பர் 1908-15 பிப்ரவரி 1948
நட்வர்சிங் பவானி சிங் (இறுதி)
வரலாறு 
• தொடக்கம்
1193
1948
முந்தையது
பின்னையது
[[கூர்ஜர-பிரதிகாரர்]]
[[பிரித்தானிய இந்தியா]]
தற்போதைய பகுதிகள்போர்பந்தர் மாவட்டம், குஜராத், இந்தியா
போர்ப்ந்தர் மகாராஜா இராணா பவானிசிங் மாதவசிங்
போர்பந்தர் இராச்சியத்தின் அனுமார் உருவத்துடன் கூடிய கொடி
போர்பந்தர் அரண்மனை

போர்பந்தர் இராச்சியம் (Porbandar State) பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் போர்பந்தர் நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில், அரபுக் கடலை ஒட்டி அமைந்திருந்தது. இது பிரித்தானிய கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது.

போர்பந்தர் இராச்சியத்தின் பரப்பளவு 1,663 சதுர கிலோமீட்டர்கள் (642 sq mi) ஆகும். இது 1921-இல் 106 கிராமங்களையும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையும், ஆண்டு வருமானம் ரூபாய் 21 இலட்சம் கொண்டிருந்தது.

வரலாறு[தொகு]

1193-ஆம் ஆண்டில் போர்பந்தர் இராச்சியமானது இராஜபுத்திர குலத்தின் ஜேத்வா வம்சத்தினரால் நிறுவப்பட்டது. 1307-இல் இதன் பெயர் ரண்பூர் இராச்சியம் என மாற்றப்பட்டது. மீண்டும் 1574-இல் இதற்கு மீண்டும் சாயா இராச்சியம் எனப்பெயரிடப்பட்டது. இறுதியாக 1785-ஆம் ஆண்டில் மீண்டும் போர்பந்தர் இராச்சியம் எனப்பெயரிடப்பட்டது. 5 டிசம்பர் 1809 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற போர்பந்தர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இந்த இராச்சியம் 1886 மற்றும் 15 செப்டம்பர் 1900-ஆண்டுகளில் பம்பாய் மாகாணத்தின் நிர்வாகத்தில், கத்தியவார் முகமையின் கீழ் சென்றது. 1888-ஆம் ஆண்டில் போர்பந்தர் இராச்சியத்தின் குற்றகலப் பாதை கொண்ட இரயில்வே இருப்புப்பாதை தொடங்கப்பட்டது.[1]

இந்திய விடுதலைக்குப் பின்னர் 15-02-1948 அன்று இந்த இராச்சியத்தை சௌராஷ்டிர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் சித்தப்பா துளசிதாஸ் காந்தி, போர்பந்தர் இராச்சியத்தின் திவானாக பணியாற்றியவர்.[2][3]

ஆட்சியாளர்கள்[தொகு]

போர்பந்தர் இராச்சியத்தை ஆண்ட இராஜபுத்திர குலத்தின் ஜேத்வா வம்சத்தினர் ஆவார்.[4]

  • 1699 – 1709 பாஞ்ஜி சர்தான் ஜி (இறப்பு. 1709)
  • 1709 – 1728 மூன்றாம் கிமோஜி (இறப்பு. 1728)
  • 1728 – 1757 மூன்றாம் விக்மாத்ஜி கிமோஜி(இறப்பு. 1757)
  • 1757 – 22 ஏப்ரல் 1813 இரண்டாம் சர்தான் ஜி விக்மாத்ஜி (இறப்பு. 1813)
  • 1804 – 1812 ஹலோஜி சுல்தான் ஜி - அரசப்பிரதிநிதி (இறப்பு. 1812)
  • 22 ஏப்ரல் 1813 – 20 சூன் 1831கிமோஜிராஜ் ஹலோஜி (இறப்பு. 1831)
  • 20 சூன் 1831 – 21 ஏப்ரல் 1900 விக்ரமாத்ஜி கிமோஜிராஜ் (பிறப்பு. 1819 – இறப்பு. 1900)
  • 20 சூன் 1831 – 1841 இராணி குன்வர்பா - அரசப்பிரதிநிதி (இறப்பு. 1841)
  • 21 ஏப்ரல் 1900 – 10 டிசம்பர் 1908 பவானி சிங் மாதவசிங் (பிறப்பு. 1867 – இறப்பு. 1908)
  • 10 டிசம்பர் 1908 – 1 சனவரி 1918 நட்வர்சிங் பவானி சிங் (பிறப்பு. 1901 – இறப்பு. 1979)
  • 10 டிசம்பர் 1908 – 1917 - பிரித்தானிய அரசப்பிரதிநிதிகள்
    • – ஜே. கே. கோண்டன் (1909 வரை)
    • – ராவ் பகதூர் ஏ. எஸ். தாம்பே (1909–1910)
    • – வாலா வஜ்சூர் வலேரா (1909–1913)
    • – எப். டி. பி. ஹான்காக் (1913–1916)
    • –எட்வர்டு ஓ`பிரையன் (ஏப்ரல் 1916 – 1918)
  • 1 சனவரி 1918 – 15 ஆகஸ்டு 1947 நட்வர்சிங் பவானி சிங்
    • 1 சனவரி 1918 – 26 சனவரி 1920 எட்வர்டு ஓ`பிரையன் - பிரித்தானிய அரசப்பிரதிநிதிகள்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]