ராம்பூர் சமஸ்தானம்
ராம்பூர் சமஸ்தானம் Dar-Ul-Insha | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1774–1947 | |||||||||
![]() தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் மஞ்சல் நிறத்தில் ராம்பூர் சமஸ்தானம் | |||||||||
தலைநகரம் | ராம்பூர் | ||||||||
ஆட்சி மொழி(கள்) | பாரசீக மொழி(1774-1887) உருது (1889-1947)[1] | ||||||||
பேசப்படும் மொழிகள் | உருது, இந்தி | ||||||||
சமயம் | சியா இசுலாம் | ||||||||
அரசாங்கம் | சுதேச சமஸ்தானம் | ||||||||
நவாப் | |||||||||
• 1754-1794 | பைசுல்லா கான் (முதல்) | ||||||||
• 1794 | முகமது அலி கான் | ||||||||
• 1794 | குலாம் முகமது கான் | ||||||||
• 1794-1840 | அகமது அலி கான் | ||||||||
• 1930-1966 | ராஜா அலி கான் (இறுதி) | ||||||||
வரலாறு | |||||||||
7 அக்டோபர் 1774 | |||||||||
15 ஆகஸ்டு 1947 | |||||||||
|




இராம்பூர் இராச்சியம் (Rampur State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரோகில்கண்ட் பிரதேசத்தில் உள்ள இராம்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் ராம்பூர் நகரம் ஆகும். இராம்பூர் இராச்சியத்தி மொத்தப் பரப்பளவு 945 சதுர மைல்கள் ஆகும்.[2] இந்த இராச்சியத்தை சியா இசுலாம் நவாப்புகள் ஆட்சி செய்தனர். இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .
வரலாறு
[தொகு]ரோகில்லாப் போருக்குப் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் அயோத்தி நவாப்புடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, 1774-இல் நிறுவப்பட்ட ராம்பூர் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இராம்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது ஐக்கிய மாகாணத்தின் குவாலியர் முகமையின் கீழ் செயல்பட்டது. இராம்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1947-ஆம் ஆண்டில் ஐக்கிய மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராம்பூர் இராச்சியம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rahman, Tariq (2011). From Hindi to Urdu : a social and political history. Orient Blackswan Private Ltd. p. 209. ISBN 978-81-250-4248-8. OCLC 757810159.
- ↑ Hunter, William Wilson (1881). The imperial gazetteer of India. India: Trübner & Company. pp. 544–546. Retrieved 16 December 2013.
Rampur state.
ஊசாத்துணை
[தொகு]- Bonnie C Wade (1984). Khyāl: Creativity Within North India's Classical Music Tradition. Cambridge University Press Archive. ISBN 0521256593.