ராஜ்பிப்லா இராச்சியம்

ஆள்கூறுகள்: 21°47′15″N 73°33′48″E / 21.78750°N 73.56333°E / 21.78750; 73.56333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்பிப்லா இராச்சியம்
રાજપીપળા રિયાસત
சுதேச சமஸ்தானம் இந்தியா
1340–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of ராஜ்பிப்லா
Location of ராஜ்பிப்லா
தற்கால கிழக்கு குஜராத்தில் பிரித்தானிய ரேவா கந்தா முகமையில் சாம்பல் நிறத்தில் இராஜ்பிப்லா இராச்சியத்தின் அமைவிடம்
தலைநகரம் ராஜ்பிப்லா
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1340
 •  சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1421 3,929 km2 (1,517 sq mi)
Population
 •  1421 2,49,032 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் நர்மதா மாவட்டம், குஜராத் இந்தியா
Painting of Manvendra Singh Gohil of the Rajpipla royal family

இராஜ்பிப்லா இராச்சியம் (Rajpipla State) 1947-இல் இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் நர்மதா மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இராஜ்பிப்லா இராச்சியம் 3929 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 2,49,032 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. நல்ல நீர் வளமும், நில வளமும் கொண்ட இராஜ்பிப்லா இராச்சியத்தின் மேற்கில் நர்மதா ஆறு மற்றும் தெற்கில் சாத்பூரா மலைத்தொடரில் தப்தி ஆறுகள் பாய்கிறது. மேலும் இந்த இராச்சியத்தில் இரத்தினக் கல் சுரங்கங்கள் உள்ளது. குஜராத்தில் பரடோ இராச்சியத்திற்குப் பின் இந்த இராஜ்பிப்லா இராச்சியமே செல்வச் செழிப்பு கொண்டிருந்தது.

வரலாறு[தொகு]

1421-ஆம் ஆண்டில் இராஜ்பிப்லா இராச்சியத்தை நிறுவியவர் இராஜபுத்திர குலத்தின் கோகில் வம்சத்தவரான கோமல் சிங் ஆவார். பின் இந்த இராச்சியம் குஜராத் சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசின் கீழ் ஒரு சிற்றரசாக இருந்தது. அடுத்து மராத்தியப் பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்தது. 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இராஜ்பிப்லா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் செயல்பட்டது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராஜ்பிப்லா இராச்சியம் 1948-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு முடிய சௌராஷ்டிர மாநிலத்துடன் இணக்கப்பட்டது. பின்னர் மொழிவார் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராஜ்பிப்லா இராச்சியம், 1956-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்[தொகு]

 • - 1421 கோமல் சிங் (இறப்பு.1421)
 • 1421 - விஜய்பால் ஜி
 • 1463 ஹரிசிங் (இ. 1463)
 • 1463 - 1526 பீம்தேவ் (இ. 1526)
 • 1526 - 1543 ராய் சிங் (இ. 1543)
 • 1543 - கரண்பாஜி
 • அபய்ராஜ் ஜி
 • சுரன் சிங்
 • பைரவ் சிங்
 • 1583 - 1593 பிரிதிவிராஜ் (இ. 1593)
 • 1593 - தீப் சிங்
 • துர்க்சாஜி
 • மொகராஜ் ஜி
 • ராய்சால் ஜி
 • சந்திர சிங்
 • முதலாம் காம்பீர் சிங்
 • சுபேர்ராஜ்
 • ஜெய்சின்
 • மல்ராஜ்
 • சூர்மல்ஜி
 • உதயகரண்
 • சந்திரபாஜி
 • 16.. – 1705 சத்திரசால்ஜி (இ. 1705)
 • 1705 – 1715 முதலாம் வேரிசால் (இ. 1715)
 • 1715 - 1730 ஜித் சிங் (இ. 1730)
 • 1730 - 1754 கோமல் சிங் (இ. 1754)
 • 1754 (6 மாதம்) தலில் சிங்
 • 1754 - 1764 பிரதாப் சிங் (இ. 1764)
 • 1764 - 1786 இராய் சிங் (இ. 1786)
 • 1786 - 15 சனவரி 1803 அஜப் சிங் (பிறப்பு. 1750 - இ. 1803)
 • 1793 – 15 சனவரி 1803 நகர் சிங் - அரசப்பிரதிநிதி (பி1780 - இ. 18..)
 • 15 சனவரி 1803 – 10 மே 1810 ராம் சிங்ங் (இ. 1810)
 • 10 மே 1810 - 9 ஆகஸ்டு 1821 நகர் சிங்
 • 9 ஆகஸ்டு 1821 – 17 நவம்பர் 1860 இரண்டாம் வெரிசால் ஜி (பிறப்பு. 1808 - இறப்பு. 1868)
 • 17 நவம்பர் 1860 – 10 சன்வரி 1897 இரண்டாம் காம்பீர் சிங் (பி. 1847 - இ. 1897)
 • 1884 - 10 ச்னவரி 1897 பிரித்தானிய நிர்வாகம்
  • -வில்லியம் ஆர்தர் சால்மோன் (சூலை 1884 - 1885)
  • - எட்வர்டு வின்செண்ட் (1885-1886) (பி. 1841 - இ. 1903)
  • - அலெக்சாந்தர் பிரான்சிஸ்
  • - அலெக்சாந்தர் செவான் (நவம்பர் 1887 - 1894)
  • - வில்லெட்டி பிட்கயர்ன் கென்னடி (அக்டோபர் 1894 - சூலை 1895)
  • - பிரான்சிஸ் வில்லியம் சினெல் (ஆகஸ்டு 1895 - நவம்பர் 1897)
 • 10 சனவரி 1897 – 26 செப்டம்பர் 1915 சத்திர சிங் (12 டிசம்பர் 1911 - )
 • 26 செப்டம்பர் 1915 – 10 சூன் 1948 விஜய் சிங் (1 சனவரி 1925 - 1948)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்பிப்லா_இராச்சியம்&oldid=3591467" இலிருந்து மீள்விக்கப்பட்டது